ott-streaming-and-theater-release
ott-streaming-and-theater-release

ஜூலை 19 2024 தமிழ் ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் படங்கள்

4.8/5 (6)

இந்த வாரம் ஜூலை 19, 2024 தமிழ் ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் படங்கள் – முழு விவரங்கள் இதோ. இந்த பட்டியலில் இந்த வாரம் ஜூலை 19, 2024ல் தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்கள் பற்றிய முழு லிஸ்ட் இங்கு உள்ளன. இதில் சமீபத்தில் வெளியான தமிழ் படங்களான தி அகாலி, அஞ்சாமை, காடுவெட்டி, ஆடுஜீவிதம் என பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. முழு தகவல்கள் இதோ.

ஆடுஜீவிதம் | நெட்ப்ளிக்ஸ்

ஆடுஜீவிதம் – மலையாள நடிகர் ப்ரித்வி ராஜ் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பலரின் கவனத்தை கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக கொண்டாடப்படுகிறது. தற்போது ஆடுஜீவிதம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது.

அஞ்சாமை | சிம்பிளி சவுத்

அஞ்சாமை – இயக்குனர் எஸ் பி சுப்புராமன் இயக்கத்தில் விதார்த், ரஹ்மான், வாணி போஜன் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் திருநாவுக்கரசு தனது ‘திருச்சித்ரம் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார்.

குடும்ப படமாக உருவாகியுள்ள ‘அஞ்சாமை’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ராமசுதர்ஷன் எடிட்டிங் செய்துள்ளார்.

தி அகாலி | ஆஹா தமிழ்

இயக்குனர் முகமது ஆசிப் ஹமீத் இயக்கத்தில் நாசர், வினோத் கிஷான், அர்ஜை, ஸ்வயம் சித்தா என பல தமிழ் திரைப்பட பிரபலங்கள் நடித்திருக்கும் திரில்லர் – திகில் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் பி யூகேஸ்வரன் ‘PSB புரொடக்சன்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிஷ் மோகன் மற்றும் சரத் இணைந்து இசையமைத்துள்ளனர்.

கிரைம் – திகில் படமாக படமாக உருவாகியுள்ள ‘தி அக்காலி’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிரி முற்பி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன் எடிட்டிங் செய்துள்ளார்.

தி அக்காலி திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 மே 31ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

ரயில் | டென்ட் கொட்டா

ரயில் – இயக்குனர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமலா, ரமேஷ் வைத்யா என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எம் வெடியப்பன் தயாரிக்க, இசையமைப்பாளர் எஸ் ஜே ஜனனி இசையமைத்துள்ளார்.

காடுவெட்டி | அமேசான் பிரைம்

இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர் கே சுரேஷ், சுப்பிரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், JSK கோபி என பல தமிழ் பிரபலங்கள் நடித்திருக்கும் அதிரடி – குடும்ப திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரா போஸ், சோலை ஆறுமுகம் (இப்பட இயக்குனர்) இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சாதிக் (வணக்கம் தமிழா) மற்றும் ஸ்ரீகாந்த் தேவா இணைந்து இசையமைத்துள்ளனர்.

அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள ‘காடுவெட்டி’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் புகழேந்தி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹாம் எடிட்டிங் செய்துள்ளார்.

காடுவெட்டி திரைப்படம் 2024 மார்ச் 15ல் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ‘யூ/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.

தி பாய்ஸ் | அமேசான் பிரைம்

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் நோவா பிலிம் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள டார்க் காமெடி – அடல்ட் திரைப்படம். இப்படத்தில் சந்தோஷ் பி ஜெயக்குமார், ஷாரா, ரெடின் கிங்ஸ்லி என பல நடித்துள்ளனர்.