சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பல வருடங்களுக்கு நடக்கும் ஒரு சரித்திர கதை போல உருவாகி வருகிறது. எனவே, வித்தியாசமான தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதற்கு காரணம் சூர்யாவின் கெட்டப்தான். அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் சிவாவுக்கு இந்த படம் பெயர் வாங்கி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் திஷா பத்தானி, ரெட்டிங் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகிபாபு என பலரும் நடித்திருக்கிறார்கள்.
மேலும், பாலிவுட் நடிகர் பாபி தியோல் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். எனவே, கங்குவா படம் ஹிந்தியிலும் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாபி தியோல் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் சூர்யா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.