விமானத்தில் பயணிக்கும் பயணியை மட்டுமல்லாமல், அவர் எடுத்து வரும் பையையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். இது குறித்த தெளிவான விதிமுறைகளை விமான நிலையங்கள் வழங்கி இருந்த போதிலும், பல பயணிகளுக்கு விமானத்தில் என்னென்ன பொருட்களை எடுத்து வர வேண்டும், என்னென்ன பொருட்களை எடுத்து வரக்கூடாது என்பது தெரிவதில்லை.
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் கிடைத்த ஒரு தகவலின் படி, டிசம்பர் 2022 முதல் மே 2023 வரை ஆகிய ஆறு மாதங்களில் 1,08,50,465 பேக்கேஜ்கள் ஸ்கேன் செய்யப்பட்டன. அவற்றில் 41,271 பைகளில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது ஏர்போர்ட்டிற்கு எடுத்து வரப்பட்ட மொத்த பைகளில் 0.4 சதவீதம் தான் என்றாலும் கூட, இது ஒரு வித பின்னடைவை உருவாக்கி, ஏர்போர்ட்டில் செய்யப்படும் பாதுகாப்பு சோதனையில் தாமதத்தை ஏற்படுத்துகிறது.
விமானத்தில் பயணிக்கும் பொழுது செய்யப்படும் பாதுகாப்பு சோதனைகள் எந்த ஒரு போக்குவரத்தை காட்டிலும் மிகவும் மேம்பட்டது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய விமான நிலையங்களில் பல வருடங்களாக தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் பாதுகாப்பு சோதனைகள், எந்த விதமான அச்சுறுத்தல்களையும் மிகவும் நவீன மெஷின்கள் மூலமாக கண்டுபிடித்து விடுகிறது.
செக்-இன் பைகளில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள்:
பேட்டரிகள், பவர் பேங்குகள், லித்தியம் உலோகம் அல்லது லித்தியம் அயன் செல்கள்:
இவை சேதமடைந்தாலோ, ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டாலோ அல்லது அதிகப்படியாக வெப்பமடைந்தாலோ இந்த பேட்டரிகள் காரணமாக விமானத்தில் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளது.
பேட்டரிகள்
பேட்டரி மூலமாக இயங்கும் வீல் சேர்கள் மற்றும் நடமாட்ட துணைக் கருவிகள் இதுபோன்ற சாதனங்கள் வெட் பேட்டரிகள் மூலம் இயங்குபவை. இவை சேதமடைந்தால் அந்த பேட்டரிகளில் இருக்கக்கூடிய ஆசிட்டானது விமான பாகங்களை சேதமடைய செய்து, அவற்றின் செயல்பாட்டை பாதிக்க வாய்ப்புள்ளது.
பவர் பேங்குகள்
கம்ப்ரஸ் செய்யப்பட்ட கேஸ் கேட்ரிஜ்கள், சிலிண்டர் லைட்டர்கள், இ-சிகரெட்டுகள் இதுபோன்ற வாயுக்கள் எளிதில் தீப்பற்ற கூடியவை. ஆகவே இவை சேதமடைந்தால் விமானம் வெடித்து சிதற வாய்ப்புள்ளது.
எலெக்ட்ரானிக் சாதனங்கள்
ஸ்விட்ச் ஆஃப் செய்ய முடியாத எலெக்ட்ரானிக் சாதனங்கள் இது போன்ற சுவிட்ச் ஆஃப் செய்ய முடியாத பேட்டரிகள் மூலமாக இயங்கும் சாதனங்கள் அதிக வெப்பத்தை வெளியிடக்கூடியவை, அதனால் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.
மெர்குரி நிரப்பப்பட்ட மருத்துவ சாதனங்கள்
தெர்மாமீட்டர் அல்லது பேரோமீட்டர், மெர்குரி நிரப்பப்பட்ட மருத்துவ சாதனங்கள் இது போன்ற சாதனங்கள் சேதமடைந்தால் அவற்றில் இருக்கக்கூடிய பாதரசம் கசிந்து, அது விமானத்தில் சேதத்தை ஏற்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் அது விமானத்தில் பரவி விட்டால், அதனால் ஏரோபிளேன் பாகங்கள் சேதமடைந்து அவை இயங்காமல் போக வாய்ப்புள்ளது.
உலர்ந்த தேங்காய்
உலர்ந்த தேங்காயில் அதிக அளவு எண்ணெய் இருக்கும். இது எளிதில் தீ பற்றக் கூடியது. ஆகவே இது போன்ற பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்வது வெப்பத்தை உருவாக்கி அதனை தீப்பிடிக்க வைத்து விடலாம்.
இது போன்ற பொருட்களை அடிக்கடி மக்கள் விவரம் புரியாமல் செக்-இன் பேக்குகளில் சுமந்து வருவதுண்டு. இவை தவிர ஆயுதங்கள், கூர்மையான பொருட்கள், திரவப் பொருட்கள் போன்றவற்றையும் விமானத்தில் எடுத்துச் செல்ல கூடாது.
Comments are closed