2025 ஆம் ஆண்டில் புதன் பகவானை அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாக உள்ளார். முழு சுபரான குரு பகவான் மிதுன ராசியில் சேர்ந்து இருப்பதால் எந்தெந்த ராசிகளுக்கு செல்வம் சேரும், அவரின் பார்வையால் யாருக்கெல்லாம் முன்னேற்றம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் முழு சுப பலனை கொடுக்க கூடியவர் குரு பகவான். ராசி மண்டலத்தைச் சுற்றிவர 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். ஒவ்வொரு ராசியிலும் ஒரு ஆண்டு காலம் தங்கக்கூடிய குரு பகவான், 2025 ஆம் ஆண்டில் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வை பலனால் யாருக்கெல்லாம் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.
2025 ஆம் ஆண்டில் குருவின் நகர்வு
குரு பகவான் ஒவ்வொரு ராசியில் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிக்கக் கூடியவர். ஆனால் இந்த 2025 ஆம் ஆண்டு குருபகவான் மிதுன ராசிக்கும், அதிசாரமாக கடக ராசிக்கும் பெயர்ச்சி மீண்டும் மிதுன ராசிக்கு திரும்புகிறார். 2025 மே 14ஆம் தேதி இரவு 10:36 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அக்டோபர் 18ஆம் தேதி, வேகமாக நகரக்கூடிய குரு அதிசாரமாக நிதானத்திலிருந்து கடக ராசிக்கு மாறுகிறார். நவம்பர் 11ஆம் தேதி கடக ராசியில் இருந்து குரு வக்கிர பெயர்ச்சியை மேற்கொள்ள தொடங்குகிறார். டிசம்பர் 5ம் தேதி வக்ரப் பெயர்ச்சியில் உள்ள குரு மீண்டும் மிதுன ராசியில் நுழைகிறார். 2026ம் ஆண்டில் குரு பகவான் மிதுன ராசியில் மீண்டும் நேர்முகமாக பெயர்ச்சியாக தொடங்குகிறார்.
குரு சஞ்சரிக்க கூடிய இடத்தை விட குருவின் பார்வை கிடைக்கக்கூடிய இடங்கள் மிகச் சிறப்பான பலனை தரக்கூடியதாக அமையும் என்கின்றனர் ஜோதிடர்கள். பொதுவாக குரு பகவான் 5, 7, 9 ஆகிய இடங்களுக்கு மிகச் சிறப்பான பலன்களை தரக்கூடியவர். அது மட்டுமல்லாமல் ராசிக்கு இரண்டு மற்றும் 11 ஆம் இடத்தில் குரு அமர்ந்து இருந்தால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் எந்தெந்த ராசிகளுக்கு 2025 ஆம் ஆண்டில் மிதுன ராசியில் குரு சஞ்சரிப்பதால் அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷப ராசி
குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதாவது ரிஷப ராசிக்கு இரண்டாம் இடமான தனஸ்தானத்தில், தன அதிபதியான குருவின் சஞ்சாரம் நடக்க உள்ளது. இதன் காரணமாக உங்கள் ராசிக்கு பல வகையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். திடீர் பண ஆதாயம் பெறுவீர்கள். தொழில் ரீதியான முன்னேற்றமும், உங்கள் தொழிலில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிதி ஆதாயமும் பெருகும். பொன் பொருள் வசதிகள் அதிகரிக்கும்.
சிம்ம ராசி
2025 இல் நடக்கும் குரு பெயர்ச்சி காரணமாக சிம்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குருவின் மாற்றம் நடக்கிறது. இதனால் நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில், வியாபாரத்தில் மிகச் சிறப்பான லாபத்தைப் பெறுவீர்கள். எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக கிடைக்கும். சரியான திட்டமிட்டு செயல்பட்டால் எல்லா விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் வேலையில் துரிதமாக செயல்படுவீர்கள். உங்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு, நிலம் வாங்கும் விஷயத்தில் நற்பலன் உண்டாகும். இருப்பினும் 2025 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்கு அஷ்டம சனி தொடங்குவதால் எல்லா விஷயத்திலும் கவனமாக செயல்படவும். புதிய முதலீடு செய்வதில் கவனம் தேவை.
துலாம் ராசி
குருவின் மிக சிறப்பான பார்வை பலன் தரக்கூடிய இடம் துலாம் ராசி. ராசிக்கு 9ஆம் இடத்தில் குருவின் சஞ்சாரம் நடப்பதால் பலவிதத்தில் நன்மை அடைவீர்கள். குருவின் தாக்கத்தால் உங்கள் வேலையில் சிறப்பான வெற்றியும், திட்டங்கள் சரியாக செயல்படுத்தவும் முடியும். வியாபாரம் முயற்சிகளில் வெற்றி அடைகிறார்கள். மாணவர்கள் போட்டி தேர்வு, விளையாட்டு தொடர்பான விஷயத்தில் வெற்றி கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். உங்களின் எந்த ஒரு செயலுக்கும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழலில் இருக்கும். மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு நிம்மதி அடைவீர்கள். ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்.
தனுசு ராசி
குருபகவானின் மற்றொரு சிறப்பான பார்வை தரக்கூடிய இடம் ஏழாம் வீடான தனுசு ராசி. உங்கள் ராசி அதிபதியான குரு பகவான் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதற்கு நன்மை அடைவீர்கள். குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமும் மற்றும் அன்பும், ஆதரவும் கிடைத்து மகிழ்வீர்கள். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் பங்குதாரர்களின் உதவியால் சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள். உங்களின் பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவும், மேலதிகாரிகளின் பாராட்டும் பெறுவீர்கள். வேலையில் உங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.
கும்ப ராசி
கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு ஏழரை சனியின் கடைசி பகுதி நடக்க உள்ள 2025ம் ஆண்டில், குரு பகவான் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் காரணமாக புதுமண தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு பாக்கியம் உண்டாகும். சனி பகவானால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாக குருவின் பார்வை பலம் கிடைக்கும். குருவின் அமைப்பால் உங்களின் வேலை, தொழில் தொடர்பான திட்டங்களில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய வியாபாரம் விரிவடையும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும். திருமண வாழ்க்கையில் துணையுடன் இணக்கமான சூழல் இருக்கும். உங்களுக்கு விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு ஏழரை சனி நடப்பதால் புதிய முதலீடு, புதிய தொழில் தொடங்குதல் போன்ற விஷயத்தில் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம். குறை வல்லுநர்களின் ஆலோசனை பெறுவது அவசியம்.