mannargudi ring road project
mannargudi ring road project

தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரம் பெரிய நகரங்களுக்கு போட்டியா அசர வைத்த வளர்ச்சி

5/5 (6)

தமிழ்நாட்டை சேர்ந்த சிறிய நகரம் ஒன்று திருச்சி, கோவை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு வேகமாக வளர தொடங்கி உள்ளது. அந்த நகரம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த நகரும் வேறு எதுவும் இல்லை.. மன்னார்குடிதான். மன்னார்குடியைச் சுற்றி 22 கி.மீ.க்கு ரிங்ரோடு அமைக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கிராம சாலைகளைத் தவிர மூன்று மாநில நெடுஞ்சாலைகளையும் இந்த சாலை இணைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிறிய நகரம் அசத்தல்

பல பெரிய நகரங்களில் கூட ரிங் ரோடு இல்லாத நிலையில் இங்கே ரிங் ரோடு அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ரிங் ரோடு அமைக்கப்படும் மிக மிக சிறிய நகரமாக மன்னார்குடி மாறி உள்ளது. தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மன்னார்குடி எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் ஏற்கனவே அங்கே பேருந்து நிலையம் மொத்தமாக புனரமைக்கப்பட்டு மத்திய பேருந்து நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் ரிங் ரோடு அமைப்பது மன்னார்குடியில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்க வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . முன்மொழியப்பட்ட சுற்றுச் சாலையுடன் கிராமப்புற சாலைகளை இணைப்பதன் மூலம் விவசாய விளைபொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு மிக எளிதாக கொண்டு செல்ல முடியும்.

ரிங் சாலை

ரிங் சாலை கும்பகோணம்-மன்னார்குடி-அதிராம்பட்டினம் சாலையை இணைக்கும் (மாநில நெடுஞ்சாலைகள் எண். 66); திருவாரூர்-மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலை (SH எண். 22); மன்னார்குடி-சேதுபாவசமுத்திரம் சாலை (SH எண். 46); மற்றும் மன்னார்குடி-திருமக்கோட்டை-சொக்கனாவூர் சாலை உள்ளிட்ட பிற சாலைகள்; மன்னார்குடி-ஒரத்தநாடு-திருவோணம் சாலை மற்றும் ஒரு சில கிராமப்புற சாலைகளை இது இணைக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

உத்தேச ரிங்ரோடு மூன்றாம்சேத்தி, பாமினி, அரவத்தூர், ராமாபுரம், கைலாசநாதர் கோயில், நாங்கம்சேத்தி, சேரங்குளம், கொப்பிராலயம், நெடுவாக்கோட்டை, குமாரபுரம், கரிக்கோட்டை, மேலவயல், மூவாநல்லூர் ஆகிய வருவாய் கிராமங்கள் வழியாகச் செல்லும்.

பணிகள் நடக்கிறது

சுற்றுச் சாலையுடன் இணைக்கப்படும் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட ஆட்சியர் மு.மதிவாணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து அனைத்து கிராமங்களுக்கும் சென்று திட்டப் பணிகள் குறித்த நேரடித் தகவல்களைப் பெற்றார். மன்னார்குடி நகரில் 73 மீட்டர் நீளமுள்ள புதிய பாலம் ரூ. 2.75 கோடி. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் அமைக்கப்படும் சிப்காட் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா இன்று அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் சிப்காட் பெரிய அளவில் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைய சிப்காட் மிகப்பெரிய காரணம் ஆகும்.

8 இடங்களில் சிப்காட்

அந்த வகையில் 8 இடங்களில் சிப்காட் அமைக்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 8 புதிய SIPCOT பூங்காக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது:

  1. ஸ்ரீபெரும்புதூர்- 750 ஏக்கர்
  2. சென்னை ORR – 200 ஏக்கர்
  3. ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி – 1,000 ஏக்கர்
  4. பெரம்பலூர்- 100 ஏக்கர்
  5. திருவெறும்பூர், திருச்சி- 150 ஏக்கர்
  6. கும்மிடிப்பூண்டி, சென்னை – 1,500 ஏக்கர்
  7. அரியலூர்- 150 ஏக்கர்
  8. மன்னார்குடி- 150 ஏக்கர்

மன்னார்குடி அசத்தல்

இதில் மன்னார்குடி அமைச்சர் டிஆர்பி ராஜா தொகுதி. தமிழ்நாட்டின் சிறிய நகரங்களில் ஒன்று என்றாலும் இங்கே சிப்காட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது போக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மன்னார்குடி எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் ஏற்கனவே அங்கே பேருந்து நிலையம் மொத்தமாக புனரமைக்கப்பட்டு மத்திய பேருந்து நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது.

கோவை போன்ற நகரங்களில் கூட ஒருங்கிணைந்த மத்திய பேருந்து நிலையம் இல்லாத நிலையில் மன்னார்குடியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.