Kerala Bumper Lottery
Kerala Bumper Lottery

கேரளா விஷூ பம்பர் லாட்டரியில் 12 கோடி ரூபாய் அள்ளப்போகும் அதிர்ஷ்டசாலிகள் குறித்த தகவல் வைரலாகி வருகிறது

5/5 (5)

கேரளா லாட்டரித்துறை விஷு பம்பர் லாட்டரி பரிசை அறிவித்துள்ள நிலையில் பரிசை குவிக்க உள்ள அதிர்ஷ்ட எண்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளா அரசின் லாட்டரித்துறை வாரத்தின் ஏழு நாட்களும் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கலை நடத்தி வருகிறது. இதன்மூலம் லட்சங்களிலும் கோடிகளிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆயிரங்களிலும் ஆறுதல் பரிசு முதல் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் கேரள லாட்டரித்துறை பம்பர் பரிசுகளையும் அறிவித்து பல கோடி ரூபாய்களில் பரிசுகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் பரிசு, கோடைக்கால பம்பர் பரிசு, விஷூ பம்பர் பரிசு, பருவக்கால பம்பர் பரிசு. ஓணம் பம்பர் பரிசு மற்றும் பூஜா பம்பர் பரிசு என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது விஷூ பம்பர் லாட்டரி டிக்கெட்டை கேரள அரசின் லாட்டரித்துறை அறிவித்துள்ளது. அதன்படி விஷூ பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசாக 12 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தை பொறுத்தவரை ஓணம் பம்பர் லாட்டரி மட்டுமின்றி எந்த பம்பர் லாட்டரியாக இருந்தாலும் மக்களின் கவனத்தை பெருமளவு ஈர்த்து வருகிறது.

காரணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான பரிசுகள் பெரிது என்பதால் மக்கள் பம்பர் டிக்கெட்டுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரள மாநில மக்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களை சேர்ந்த மக்களும் லாட்டரி டிக்கெட்டை வாங்கி தங்களின் அதிர்ஷ்டத்தை சோதித்து வருகின்றனர்.

பண்டிகைக் காலங்களில் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் பெரிய பரிசுகளைப் பெறுவதற்கு அதிர்ஷ்டசாலிகள் மற்றும் சில அதிர்ஷ்ட எண்களையும் மக்கள் முயற்சி செய்து வருகின்றனர். லாட்டரி பரிசுகளை வெல்ல விரும்பும் நபர்கள் இந்த எண்களை முயற்சி செய்தால் லாட்டரி பரிசுகளை வெல்ல வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல், லாட்டரி எண்ணுடன் தங்களின் அதிர்ஷ்ட எண்களையும் சேர்த்து பெறும் லாட்டரி டிக்கெட்டுகளில் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. லாட்டரியின் அனைத்து எண்களையும் கூட்டினால் கிடைக்கும் எண் லாட்டரி வாங்குபவரின் அதிர்ஷ்ட எண்ணாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதாவது, லாட்டரி டிக்கெட் வாங்குபவரின் அதிர்ஷ்ட எண் 1 என்றால், லாட்டரியில் உள்ள எண்களைக் கூட்டி 1 என்ற எண் வந்தால் அதுவே அதிர்ஷ்ட எண் ஆகும்.

இந்த அடிப்படையில் 27 நட்சத்திரங்களின் அதிர்ஷ்ட எண்களும் உள்ளதாக கூறப்படுகிறது. சில நட்சத்திரங்களுக்கு இவற்றில் இரண்டு எண்கள் உண்டு என்றும் இந்த எண்களில் கவனம் செலுத்தினால் லாட்டரி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட எண்களும் மலையாள செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி அஸ்வினி நட்சத்திரத்திற்கு அதிர்ஷ்ட எண் 5, பரணிக்கு 8, கார்த்திகை நட்சத்திரத்திற்கு 4 மற்றும் 9, ரோகிணி நட்சத்திரத்திற்கு 3 மற்றும் 8, மிருகசிருஷம் நட்சத்திரத்திற்கு 4 மற்றும் 7 மற்றும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு 6 மற்றும் 4, புனர்பூசம் நட்சத்திரம். 6 மற்றும் 9 மற்றும் பூசம் அதிர்ஷ்ட எண்கள் ஆயில்யத்திற்கு 3, 7, 3 மற்றும் 9, மகம் நட்சத்திரங்களுக்கு 4, 8 மற்றும் பூரம் நட்சத்திரங்களுக்கு 4, 7 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் உத்திரம் நட்சத்திரங்களுக்கு 4, 8, அஸ்தம் நட்சத்திரங்களுக்கு 6, 7, சித்திரைக்கு 3, 9, சுவாதிக்கு 8 அல்லது 9, விசாகத்திற்கு 7, 9, அனுஷம் நட்சத்திரத்துக்கு 3, 7, கேட்டை 6, 8 மற்றும் இதேபோல் 4, 7க்கு மூலம் நட்சத்திரம். அதிர்ஷ்ட எண்கள் பூராடம் நட்சத்திரங்களுக்கு 3, 9, உத்திராடத்திற்கு 8, 9, திருவோண நட்சத்திரங்களுக்கு 3, 9, அவிட்டம் நட்சத்திரங்களுக்கு 4, 9, சதயம் நட்சத்திரங்களுக்கு 4, 9, பூரட்டாதி நட்சத்திரங்களுக்கு 3, 9, உத்தட்டாதி மற்றும் 5,9. ரேவதிக்கு 6, 8 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நட்சத்திரக்காரர்கள் இந்த எண்ணைக் கொண்டு லாட்டரி டிக்கெட் வாங்கினால் பரிசு வெல்லும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. விஷூ பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் கடந்த மாதம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல் பரிசாக 12 கோடி ரூபாயும் இரண்டாம் பரிசாக ஒரு கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இதற்கான குலுக்கல் வரும் மே மாதம் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 Comment

Comments are closed