BJP Candidates List

மக்களவை தேர்தல் 2024 | பாஜக வேட்பாளர்கள் பட்டியல்

5/5 - (4 votes)

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. முதல்கட்டமாக தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதற்காக தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீடுகளைப் பிரித்துவருகின்றன.

அந்த வகையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி ஆகியவற்றில் இடம்பிடித்துள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு நிறைவு பெற்றுள்ளன. இன்று நிறைவடைந்த பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.காவுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதேநேரத்தில், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவில்லை. தொடர்ந்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று 39 இடங்களுக்கான கூட்டணி தொகுதிப் பங்கீடுகளையும் அறிவித்தார்.

20 இடங்களில் பாஜக போட்டி: 9 வேட்பாளர்கள் அறிவிப்பு!

அந்தவகையில், பாஜக நேரிடையாக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதைத் தவிர கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமவுக்கு 2, அமமுகவுக்கு 2, த.மா.காவுக்கு 3 எனவும், புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 கட்சிகள் நேரிடையாக தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.

2024 மக்களவை தேர்தல் பாஜக வேட்பாளர் பட்டியல்:

பாஜக வேட்பாளர் பட்டியல்தொகுதி
அண்ணாமலைகோயம்புத்தூர்
தென்சென்னைதமிழிசை சௌந்தரராஜன்
மத்திய சென்னைவினோத் பி செல்வம்
வேலூர்ஏ.சி.சண்முகம் (கூட்டணி)
கிருஷ்ணகிரிநரசிம்மன்
நீலகிரிஎல்.முருகன்
பெரம்பலூர்பாரிவேந்தர் (கூட்டணி)
தூத்துக்குடிநைனார் நாகேந்திரன்
கன்னியாகுமரிபொன் ராதாகிருஷ்ணன்

Related Post