Guna Cave
Guna Cave

மஞ்சும்மல் பாய்ஸ் எதிரொலி குணா குகையில் குவியும் சுற்றுலா பயணிகள்

4.8/5 (5)

மலையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்படாமல் நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது மஞ்சுமெல் பாய்ஸ் படம். கடந்த மாதம் 22ஆம் தேதி இந்த படம் தமிழகத்தில் 50 திரையரங்குகளில் மட்டுமே ரிலீசான நிலையில், படத்திற்கு ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து இரு தினங்களில் படத்தின் தியேட்டர்களின் எண்ணிக்கை 250ஆக அதிகரிக்கப்பட்டு தற்போது தமிழகத்தில் இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது, இந்தப் படம் சில தினங்களிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது,

தமிழ்நாடு, கேரளாவின் மூலை முடுக்குகளில் இருந்து கொடைக்கானலை அடையும் மக்கள், முதலில் சொல்வது ‘குணா குகைக்கு வண்டியை விடுங்கள்” என்பதே.

மஞ்சும்மல் பாய்ஸ் போன்று, கூட்டம் கூட்டமாக வரும் நண்பர்கள், படத்தில் வருவதைப் போன்று, மரத்தின் வேர்களில் அமர்ந்து குரூப் போட்டோ எடுத்து உற்சாகம் கொள்கின்றனர். சிலர் உற்சாக மிகுதியில் ஒருபடி மேலே போய், கண்மணி அன்போடு காதலன் பாடலை ஒன்றாக சேர்ந்து பாடி மகிழ்ந்தனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் லிஸ்டில் கடைசியாக இருந்த குணா குகை இன்று கொடைக்கானலின் முகவரியாக மாறியிருக்கிறது.

பாதுகாப்பு அம்ச‌ங்க‌ளை ஏற்படுத்தி குணா குகையை கண்டு ரசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சுற்றுலாப்பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் உள்ளிட்ட படக்குழுவினருக்கே, குணா குகைக்குள் படப்பிடிப்பு எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை தழுவியே மஞ்சும்மல் பாய்ஸ் படம் எடுக்கப்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த காலகட்டத்தை திரையில் கொண்டுவருவதற்காக கடினமாக உழைத்தாக படக்குழு தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் பொதுத்தேர்வு காலம் என்பதால், வழக்கமாக கொடைக்கானல் அமைதியாகவே காணப்படும். தற்போது மஞ்சும்மல் பாய்ஸின் எல்லை கடந்த வெற்றியால், கொடைக்கானலில் எங்கும் கொண்டாட்டக் குரல் ஒலிக்கிறது.

1 Comment

Comments are closed