Thirumal
Thirumal

ஏகாதசி மரணம் துவாதசி தகனம்

5/5 (1)

ஏகாதசி மரணம் துவாதசி தகனம்… இது நாம் எல்லோரும் சொல்லுவது ஆனால் இதன் சரியான அர்த்தம் என்ன தெரியுமா? ஒரு விஷயத்தில் நாம் மிகச் சரியானவர்கள்…தவறாக புரிந்து கொள்வதில்…

இது…ஏகாதசி ஸ்மரணம், துவாதசி தகனம்…. ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலைத் துதிக்க, (ஸ்மரணம்) வேண்டும். துவாதசியில் விரதம் பூர்த்தி செய்து தகனம் (பாரணை –உணவு) செய்யவேண்டும்.

தகனம் என்றால் – ஆகாரம், சீரணம், எரித்தலாகிய சுத்தீகரணக் கிரியை என்று பொருள். ஏகாதசியில் அவன் நாமம் சொல்லி, அவன் சிந்தனையாகவே இருந்து,

துவாதசியில் அவன் பிரசாதமாய், திருத்துழாய் (துளசி) மற்றும் நீர் அருந்தி பின் அவருக்கு படைக்கப் பட்ட உணவு குறிப்பிட்ட காலத்துக்குள் அருந்தி நம்மை நாமே சுத்தீகரணம் செய்து கொள்ள வேண்டிய நாள்…

என்ன உங்களுக்கு சரியான அர்த்தம் புரிகிறது தானே.

இனி யாரேனும் இதனை சொன்னால் நீங்கள் இதனை தெரிவியுங்கள்.