திருவாரூர் கலைஞர் கோட்டம்: முன்னாள் முதல்வர் கருணாநிதிநியின் நினைவை போற்றும் வகையில் கலைஞர் கோட்டம் திருவாருரில் கட்டப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது கலைஞர் கோட்டம். திருவாரூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நினைவாக கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கலைஞர் உருவாக்கிய வள்ளுவர் கோட்டத்தின் ஆழித்தேர் பாணியிலேயே தற்போது கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் இந்த கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 7000 சதுர அடியில் 12 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இங்கு கலைஞர் கருணாநிதியின் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளதோடு அவரது பொது வாழ்க்கையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் வகையில் அருங்காட்சியகம் ஒன்றும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கருணாநிதியின் இளமைக்கால புகைப்படங்கள், அரசியல் பொதுவாழ்வு பணிகள் குறித்த புகைப்படங்கள், பெரியார், அண்ணா, மற்றும் திராவிய இயக்க தலைவர்களுடன் இணைந்து கருணாநிதி ஆற்றிய முக்கிய அரசியல் பணிகள் குறித்த புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு கலைஞர் தன் வாழ்நாளில் பயன்படுத்திய பொருட்கள் அவர் எழுதிய புத்தகங்களும், கட்டுரைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
தன் வாழ் நாள் முழுவதும் வாசிப்பை கைவிடாத கலைஞரின் நினைவாக உருவாக்கப்பட்ட நினைவிடத்தில் நூலகம் இல்லாமல் இருக்குமா என்ன. கருணாநிதியின் தந்தை முத்து வேலர் பெயரில் நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், கலைஞர் அடைக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டை சிறை போன்ற கட்டமைப்புகள், கலைஞர் பயன்படுத்திய கண்ணாடி, பேனா போன்றவற்றை பொதுமக்கள் தொட்டுப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துவதற்காக மெய்நிகர் தோற்றம் (Virtual Reality)வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பும் வகையில் இரண்டு சிறிய திரையரங்குகளும் இங்கு இடம் பெற்றுள்ளன. அது மட்டும் இல்லாமல் 2 திருமண மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளது.
திருவாரூர் என்றலே நம் நினைவலைகளில் வருவது 96 அடி உயரமும், 400 டன் எடையும் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய தேர்தான். அந்த வகையில் கலைஞர் உயிரோடு இருந்த போது தான் அமைத்த வள்ளுவர் கோட்டத்தை திருவாரூர் தேர் வடிவில் உருவாக்கினார். தற்போது அவருக்காக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் அதே திருவாரூர் தேர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் அருகே அமர்ந்து புகைப்படம் எடுப்பது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உற்சாகமாக செஃல்பி எடுத்துக்கொள்கின்றனர்.
நுழைவு கட்டணம்
திருவாரூர் கலைஞர் கோட்டத்திற்கான நுழைவுச் சீட்டு விலை ரூபாய் குழந்தைகளுக்கு ரூபாய் 10 மற்றும் பெரியவர்களுக்கு ரூபாய் 20.
நுழைவுச் சீட்டு | நுழைவு கட்டண விலை |
---|---|
பெரியவர்களுக்கு (For Seniors) | ரூபாய் ₹20 |
சிறியவர்களுக்கு (For minors) | ரூபாய் ₹10 |
கலைஞர் கோட்டம் நேர விவரம்
தினம்தோறும் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும் மாலை 3:00 மணி முதல் மாலை 7:00 மணி வரையிலும் இந்த கலைஞர் கோட்டத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.
வார நாட்கள் | நேரம் |
---|---|
ஞாயிறு | 09:00 am to 07:00 PM |
திங்கள் | 09:00 am to 07:00 PM |
செவ்வாய் | 09:00 am to 07:00 PM |
புதன் | 09:00 am to 07:00 PM |
வியாழன் | 09:00 am to 07:00 PM |
வெள்ளி | 09:00 am to 07:00 PM |
சனிக்கிழமை | 09:00 am to 07:00 PM |
Direction
திசை வழிகாட்டி
From Thiruvarur: 5 கிமீ, 10 நிமிடங்கள் ஓட்டவும்
- 59, பனகல் சாலை, சாந்தமங்கலம், KTR நகர், திருவாரூர், தமிழ்நாடு 610001, இந்தியா
- தென்மேற்கு மயிலாடுதுறை – திருவாரூர் வழியாக திருத்துறைப்பூண்டி சாலை/பனகல் சாலைப்பாதை (வலதுபுறம்)
- 59 மீ | ரவுண்டானாவில், 1வது வெளியேறி மயிலாடுதுறை – திருத்துறைப்பூண்டி சாலை/பனகல் சாலை வழியாக பெரியார் சிலை (வலதுபுறம்) இல் தங்கவும்.
- 430 மீ | ரவுண்டானாவில், திருவாரூர் மேம்பலம் பேருந்து நிலையம் வழியாக என்எச் 83பாஸில் இரண்டாவது வெளியேறவும். (இடப்பக்கம்)
- 1.66 கிமீ | SH 65Pass இல் ARUL AUTO WORKS இல் வலதுபுறம் திரும்பவும் கல்லுப்பாலம் பேருந்து நிறுத்தம் வழியாக (வலதுபுறம்)
- 3.14 கிமீ | திவ்ய ஸ்ரீ பானி பூரி ஸ்டாலில் வலதுபுறம் திரும்பவும்
- 81 மீ | QJR3+Q97, SH 65, காட்டூர், தமிழ்நாடு 610104, இந்தியா