AR Rahman
AR Rahman

ஏஐ மூலம் மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

5/5 - (1 vote)

இந்தப் படத்தில் ‘திமிறி எழுடா’ பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மட்டும் ஷாகுல் ஹமீத் ஆகியோரது குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.  இவருடைய காட்சி படத்தில் இருவது நிமிடம் இடம்பெறும் என கூறப்படுகிறது அந்த திரைப்படத்தில் விஷ்ணு – விஷால் விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.

அதில் மதத்தை மையமாக வைத்து நடக்கும் அரசியலை விமர்சித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  இதற்கான காட்சி லால் சலாம் திரைப்படத்தின் ட்ரெய்லரிலும் இடம்பெற்று இருந்தது.  சமீபத்தில் வெளியான அந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தில் ‘திமிறி எழுடா’ பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மட்டும் ஷாகுல் ஹமீத் ஆகியோரது குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடல் ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றாலும் சில சர்ச்சைகளும் எழுந்தது. இந்த சர்ச்சைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி, “அவர்களின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்த அவர்களது குடும்பத்தினரிடம் முறையான அனுமதி பெற்று, அதற்கு தகுந்த சன்மானமும் வழங்கி உள்ளோம். தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்தினால் ஒருபோதும் அது அச்சுறுத்தலாகவும், தொல்லையாகவும் அமையாது” என ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *