2025ல் உலக அளவில் என்ன நடக்கும்.. இயற்கை பேரிடர்கள் ஏற்படுமா.. பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் எதுவும் ஏற்பட போகிறதா என்று பாபா வங்கா கணித்து இருக்கிறார்.. அவரின் முக்கியமான கணிப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
2025ம் வருடத்தில் என்ன நடக்கும்?: 2025ல் என்னென்ன நடக்கும் என்றும் பாபா வங்கா தனது கணிப்பில் எழுதி வைத்து இருக்கிறாராம். 2025 ஆம் ஆண்டில், மூளை அலைகளைப் பயன்படுத்தி நேரடியாக தொடர்பு கொள்ளும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்குவார்கள் என்று பாபா வங்கா கூறியுள்ளார். அதாவது போன் மூலம் பேசாமல் நேரடியாக மூளை அலைகள் மூலம் பேசும் முறையை கொண்டு வருவார்கள். இது டெலிபதியின் ஒரு வடிவமாகக் கருதப்படலாம், இது மக்கள் தொடர்பு கொள்ளும் முறையை முற்றிலும் மாற்றும் என்று கூறி உள்ளார்.
பாபா வங்கா 2025 இல் வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்பு பற்றியும் பேசியுள்ளார். சூப்பர் பவுல் அல்லது ஒலிம்பிக் போன்ற முக்கிய விளையாட்டு நிகழ்வின் போது இந்த தொடர்பு ஏற்படலாம். இந்த நிகழ்வு மனித குலத்திற்கும் அறிவியலுக்கும் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும். மிக முக்கிய நிகழ்வு ஒன்றின் போது நேரடியாக ஏலியன் உடன் நாம் தொடர்பு கொள்வோம் என்று கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் மனித உறுப்புகளை ஆய்வகங்களில் வளர்க்க முடியும் என்று பாபா வங்கா கூறியுள்ளார். இது மருத்துவத் துறையில் பெரும் புரட்சியாக இருக்கும். இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றும்.
புதிய ஆற்றல் ஒன்றின் கண்டுபிடிப்பு 2025 இல் நடக்கும். இது உலகை மாற்றும் மிகப்பெரிய நிகழ்வாக இருக்கலாம். இந்த ஆற்றல் மூலமானது சுற்றுச்சூழல் நெருக்கடியை சமாளிக்க உதவும். அதேபோல் உலக அளவில் மக்கள் ஆற்றலை பயன்படுத்தும் முறையும் மாறும்.
அதன்படி 2025ல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து அட்டாக் செய்யும். இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழிய போகிறார்கள் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த நாட்டுக்காரரின் கையால் ஒரு பெரிய ரஷ்ய தலைவர், கொலை செய்யப்படுவார். அவரது கொலை உலகத்தை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளும் என்று தெரிவித்துள்ளார் . அதாவது புடின் மரணம் பற்றி கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் பெயரிடப்படாத “பெரிய நாடு” உயிரியல் ஆயுதத் தாக்குதல்களை உருவாக்கும் . அதை வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அதே வேளையில், ஐரோப்பா முழுவதும் வேறு விதமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நாடாகும் என்றுள்ளார்.
பாபா வங்கா யார்?: பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் பற்றி நாம் பார்த்த நிலையில்.. அவர் யார் என்று ஒரு சின்ன இன்ட்ரோ பார்த்து விடலாம். பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டி பாபா வங்கா. இவர் 1996லேயே இறந்துவிட்டார். பிறகு ஏன் இவரின் கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது என்று கேட்கிறீர்களா?
இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அவர் இறக்கும் முன்பே கணிப்புகளை எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார். இவருக்கு 12-13 வயது இருக்கும் போது பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல் வெள்ளத்தில் பாபா வங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்கு பார்வை பறிபோனது.
சக்தி: அந்த நொடியில் அவருக்கு எதிர்கால காட்சிகள் மனதில் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது இவருக்கு தினமும் காட்சிகளாக வந்துள்ளதாம். இதைத்தான் இவர் கணிப்புகளாக எழுதி உள்ளார். கடவுள் தனக்கு கொடுத்த சக்தி இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 5079ம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அது வரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார்.
இதுவரை உலகின் பல முக்கிய நிகழ்வுகளை இவர் துல்லியமாக கணித்ததாக கூறப்படுகிறது. உதாரணமாக 9/11ல் அல்கொய்தா அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தியதை இவர் துல்லியமாக கணித்து இருந்தாராம். அதேபோல் இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விஷயங்கள் இவர் கணித்து உள்ளாராம்.