Ayodhya Ram
Ayodhya Ram

தினமும் ஒருமணிநேரம் மூடப்படும் அயோத்தி ராமர் கோவில்

5/5 - (1 vote)

அயோத்தி ராமர்

அயோத்தி ராமர் கோவிலில் உள்ள ஸ்ரீராம் லல்லா ஐந்து வயது குழந்தை ஆகையால் அவருக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் தினமும் ஒருமணிநேரம் அயோத்தி ராமர் கோவில் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 16.02.2024 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது.

புனித நகரமான அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவில் வெள்ளிக்கிழமை முதல் தினமும் மதியம் ஒரு மணி நேரம் மூடப்படும் என ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் அலைமோதும் பக்தர் கூட்டம்

அயோத்தி ராமர் கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த ஜனவரி 23-ம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும். அதன்பிறகு, 6 மணிக்கு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு இரவு 10 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை ராமருக்கு ஓய்வு

அதிகாலையில் விழிக்கும் குழந்தை ராமர் பக்தர்களை இடைவெளியின்றி சந்திப்பதால் சிறிது ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதியம் 12.30 முதல் 1.30 மணி வரை தெய்வம் ஓய்வெடுக்கும் வகையில் கோயில் கதவுகள் சாத்தப்படும். இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறு தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா தெரிவித்தார்.