Pushpa 2 Social Media Reviews
Pushpa 2 Social Media Reviews

புஷ்பா 2 சமூக ஊடக விமர்சனங்கள் ரசிகர்கள் செம ஹேப்பி வசூல் மழை கன்பார்ம்

4.6/5 (14)

அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. படைத்த பார்த்தவர்கள் மாஸ், திரில், பட்டைய கிளப்புகிறது என டிவிட்டரில் கொண்டாடிக் கொண்டுள்ளனர். அல்லு அர்ஜூனுக்கு நிகராக பகத் ஃபாசில் மிரட்டியுள்ளதாகவும், இயக்குநர் சுகுமார் மீண்டும் இந்திய பிரம்மாண்டத்தை கொடுத்திருப்பதாகவும் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் டிவிட்டரில் ரிவ்யூ கொடுத்துள்ளனர். கொடுத்த பணத்துக்கு இந்த படம் வொர்த் எனவும், இந்த படத்துக்கு கொடுக்கப்பட்ட ஹைப்புக்கு தகுதியான படமே என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு புஷ்பா 2 படத்தின் முதல் பாகம் வெளியானது. அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. தமிழ்நாடு ஆந்திரா எல்லையையொட்டி நடக்கும் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் செம்மரக்கடத்தல்காரராக புஷ்பா என்ற கேரக்டரில் அல்லு அர்ஜூன் நடித்திருந்தார். முதலில் கூலிக்கு வேலை செய்து கொண்டிருந்த புஷ்பா பின்னர் செம்மரக்கடத்தல் தொழிலை தானே தலைமையேற்று நடத்தும் தாதாவாக உயருகிறார். அப்போது, ஏற்கனவே இந்த தொழிலில் இருக்கும் தாதாக்களை எப்படி தன் வழிக்கு கொண்டு வருகிறார் என்பது தான் கதையின் பரபரப்பான கிளைமாக்ஸாக இருந்தது. கூடவே, செம்மரக்கடத்தலை கண்டுபிடித்து தடுக்கும் போலீஸ் அதிகாரி வேடத்தில் பகத் பாசில் நடித்திருந்தார். அதில் தாதவாக உயர்ந்த அல்லு அர்ஜூன், இரண்டாம் பாகத்தில் பகத்பாசில் என்ன செய்யப்போகிறார் என்பது தான் புஷ்பா 2 படத்தின் மிக முக்கியமான தீம்.

அந்தவகையில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. முதல் பாதி மிரட்டலாக இருப்பதாகவும், இரண்டாம் பாதியும் மீடியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிரட்டிவிட்டதாகவும், ஓப்பனிங் முதல் இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை என டிவிட்டர் ரசிகர்கள் கூறியுள்ளனர். ஒருசிலர், புஷ்பா 1 படத்துக்கு நிகராக இல்லை என்றாலும் கொடுத்த பணத்துக்கு மோசமில்லை நன்றாகவே இருக்கிறது என கூறியுள்ளனர். புஷ்பா 2, இரண்டாம் பாதி கடைசி 30 நிமிடம் பிளாட்டாக இருப்பது, எமோஷ்னல் கனெக்ட் இல்லை, கிளைமாக்ஸை முன்கூட்டியே கனித்துவிட முடியும் என்பது மட்டுமே குறையாக சொல்லப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பீகாரில் மட்டும் சுமார் 30 லட்சத்துக்கும் மேலான ரசிகர்கள் முன்னிலையில் புஷ்பா 2 படத்தின் டிரெய்லரை அல்லு அர்ஜூன் வெளியிட்டார்.

இந்தியாவின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியது.

இதனைத் தொடர்ந்து Book My Show தளத்தில் Pushpa 2 படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இந்த தளத்தில் குறைந்த நேரத்தில் அதிக முன்பதிவு செய்யப்பட்ட இந்திய திரைப்படம் என்ற ரெக்கார்டை படைத்திருக்கிறது புஷ்பா 2. 1 மில்லயன் டிக்கெட்டுகள் Book My Show-ல் விற்று தீர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக 2.14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருப்பதாகவும், இதனால் ஏற்கனவே 100 கோடி ரூபாய் கலெக்ஷனை கடந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. முதல் நாள் முடிவில் உலகளவில் 250 கோடி ரூபாய் வசூலை புஷ்பா எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ஆர்ஆர் திரைப்படம் 223 கோடி முதல் நாளில் வசூலானதே இப்போது வரை சாதனையாக இருக்கிறது. இந்த சாதனையை புஷ்பா 2 திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Comment

Comments are closed