கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு போன்ற ஒரு பொருள், இது நமது ரத்தத்தில் உள்ளது. உடலின் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும், வைட்டமின் டி உற்பத்தி செய்யவும், உணவை ஜீரணிக்கவும் உதவுகிறது. ஏனெனில் கொலஸ்ட்ரால் ஒட்டும் மற்றும் மெழுகு போன்றது. இது பிளேக்கை உருவாக்குவதன் மூலம் ரத்த நாளங்களில் குவியத் தொடங்குகிறது. இதனால் இதய நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால் எல்லா கொலஸ்ட்ராலும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
இவை இரண்டு வகைகளாகும். ஒன்று LDL அதாவது கெட்ட கொலஸ்ட்ரால், மற்றொன்று HDL அதாவது கெட்ட கொலஸ்ட்ரால். கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிப்பது உடலில் நோய்களை உண்டாக்குகிறது. அதே சமயம் நல்ல கொலஸ்ட்ரால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை (இதில் எல்.டி.எல் அடங்கும்) கல்லீரலுக்கு கொண்டு வந்து, அது உடைந்து உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
உங்கள் உணவு முறை சரியாக இருந்தால், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இருப்பினும், சில சமயங்களில் அந்த உணவுகள் உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தாலும் அதன் தோற்றமும், சுவையும் சாப்பிட வைத்துவிடும். இந்த உண்ணும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. சரி உடலுக்கு தீங்கு விளைவித்து கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
ரெட் மீட்
பீஃப், போர்க், மட்டன் போன்ற ரெட் மீட்டில் புரோட்டீனும், சாச்சுரேட்டட் கொழுப்பும் அதிகமாக உள்ளது. மேலும், இது எல்டிஎல் அளவை அதிகரிக்க வழிவகுக்கும் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது. அதனால் கொலஸ்ட்ரால் நோயாளிகள் இவற்றை சாப்பிடக்கூடாது.
பால் பொருட்கள்
கொலஸ்ட்ரால் நோயாளிகள் அதிக கொழுப்புடைய பால், கிரீம், சீஸ் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்கள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். இவற்றிற்கு மாற்றாக பாதாம் பால் அல்லது சோயா பால் போன்ற தாவர அடிப்படையிலான பால் பொருட்களை பயன்படுத்துங்கள்.
பாமாயில்
பாமாயிலின் அதிகப்படியான பயன்பாடு எல்டிஎல் கொழுப்பின் அளவை அதிகரிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே கொலஸ்ட்ரோல் வராமல் தடுக்க பாமாயிலில் செய்யப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பேக் செய்யப்பட்ட உணவு
பேக் செய்யப்பட்ட உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு, ஆரோக்கியமற்ற கலோரிகள் மற்றும் சர்க்கரை ஆகியவை நிறைந்துள்ளது, எனவே கொலஸ்ட்ரால் நோயாளிகள் இதனை சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கெட்ட கொழுப்புகளும், சோடியம் அளவு அதிகமாகவும் இருக்கும். எனவே இது இதய பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே இத்தகைய உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.
பேக்டு உணவுகள்
இவற்றில் பெரும்பாலும் வெண்ணெய் அதிகமாக சேர்க்கப்படுகிறது, எனவே கொலஸ்ட்ரால் நோயாளிகள் இதனை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்க வழிவகுக்கிறது.
வறுத்த உணவுகள்
எண்ணெயில் வறுத்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் பெரும்பாலும் ட்ரான்ஸ் கொழுப்புகள் அல்லது ஆரோக்கியமற்ற எண்ணெய்கள் இருக்கும். இவை எல்டிஎல் கொழுப்பின் அளவை கணிசமாக உயர்த்தும். எனவே எண்ணெய் வறுத்த உணவுகள் கொலஸ்ட்ரோல் நோயாளிகள் தவிர்க்கவும்.