கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பெரியளவில் வரவேற்பை பெற்றது. நோலன் அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. ‘ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்த திரைப்படம், கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதில் ஒப்பன்ஹெய்மர் கதாபாத்திரத்தில் சிலியன் மர்பி நடித்து இருந்தார். அத்துடன் திரையரங்குகளில் வெளியான இப்படம் உலகம் முழுவது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இது சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்கம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்றது. ஆஸ்கருக்கு விருதுக்கு முன் கோல்டன் குளோப் மேடையிலும் 5 விருதுகளை ‘ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படம் வென்றது.
கொரோனா நோய் தொற்று காலத்திற்கு பின் உலகின் அனைத்து திரைத்துறைகளும் பாக்ஸ் ஆஃபிஸில் பெரும் சரிவை எதிர்கொண்டு வந்தன. திரையரங்கத்தை நோக்கி மக்களை ஈர்க்க நல்ல படங்களின் வருகையும் குறைவாகவே இருந்தது. அதிகம் எதிர்பார்க்கப் பட்ட பல படங்களும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படியான நிலையில் வெளியான ஓப்பன்ஹெய்மர் மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்குகளை நோக்கி படை எடுக்க வைத்தது . இந்தியாவில் மட்டும் 150 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்த இந்தப் படம் உலகளவில் 8 ஆயிரம் கோடி வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் வரவேற்பிற்கு ஹிட்டிற்கும் முதல் மற்றும் முக்கியமான காரணம் இது ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால்தான். ஆம்! இது அமெரிக்கன் இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஓபென்ஹெய்மர் என்பவரின் உண்மைக் கதையின் அடிப்படையில் எடுத்தப் படம். இரண்டாம் உலகப்போர் காலத்தில் ராபர்ட் அணுகுண்டை (Nuclear bomb) உருவாக்கியதன் கதையாகும். இரண்டாவது முக்கிய காரணம் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்தான். அறிவியல் சம்பந்தப்பட்டப் படங்களை எடுப்பதில் இவரை அடித்துக்கொள்ள யாருமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்படம் சிறந்தத் துணை நடிகர், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு , சிறந்தப் படத்தொகுப்பு மற்றும் சிறந்தப் படம் என மொத்தம் 7 ஆஸ்கார் விருதுகளை வாங்கியது. விருதுகளை மட்டுமல்ல பலப் பட்டங்களையும் அள்ளிக் குவித்தது.
அதாவது உலகளவில் வசூல் சாதனைப் படைத்த படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. உலகப்போர் 2 பற்றிய படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம், அதிக வசூல் ஈட்டிய உண்மைக் கதைப் படம், மதிப்பிடப்பட்ட படங்களில் இரண்டாவது வசூல் சாதனை குவித்தப் படம் ஆகிய பட்டங்களை இப்படம் சுமந்திருக்கிறது.
இதையடுத்து, ‘ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படம் மார்ச் 21 ஆம் தேதி ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed