பாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்த ஆண்டில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகி சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது, அதிலும் குறிப்பாக தென்னிந்திய படங்களை சினிமா ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அந்த வகையில் கூகுளில் அதிக தேடப்பட்ட இந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதின் லிஸ்ட் வெளியாகி ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஆவேசம்
கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் லிஸ்டில் 10வது இடத்தில் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான ‘ஆவேசம்’ திரைப்படம் உள்ளது. ஆக்ஷன், திரில்லர், காமெடி, சஸ்பென்ஸ் கதைக்களத்தில் வெளியான இந்த மலையாள படம் பான் இந்தியா படமாக வெளியாகி சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. இப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம்.
Salaar
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் Salaar. ஆக்ஷன், திரில்லர் காட்சிகள் நிறைந்த இப்படம் இந்த டாப் 10 லிஸ்டில் 9ம் ஏத்தி பிடித்துள்ளது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
கோட்
நடிகர் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, திரிஷா உள்ளிட்ட பல ஸ்டார் நடிகர்கள் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘கோட்’. விமர்சனத்தில் கொஞ்சம் அடிவாங்கிய இப்படம் வசூலில் செம ஹிட் கொடுத்தது. இந்த லிஸ்டில் 8ம் இடத்தை பிடித்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
மஞ்சுமெல் பாய்ஸ்
மலையாள சினிமா கொடுத்த மற்றொரு சூப்பர் ஹிட் திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் இந்த லிஸ்டில் 7ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த அசத்தல் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.
மகாராஜா
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 50வது திரைப்படம் ‘மகாராஜா’. புதுமுக இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இந்த டாப் 10 லிஸ்டில் 6ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
Hanu Man
தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் Hanu Man. சினிமா ரசிகர்களை அதிகம் ஈர்த்த இப்படம் இந்த லிஸ்டில் 5ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், ஜீ5 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் காணலாம்.
Laapataa Ladies
ஹிந்தியில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் Laapataa Ladies. சிம்பிளான வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படம் ஆசைகள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லிஸ்டில் 4ம் இடத்தை பிடித்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் காணலாம்.
12th Fail
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஹிந்தி திரைப்படம் 12th Fail. இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இப்படம் இந்த லிஸ்டில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் மிஸ் பண்ணிடாம பாருங்க.
Kalki 2898 AD
பிரபாஸ், அமிதா பச்சன், கமல், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல ஸ்டார் பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் Kalki 2898 AD. கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்டில் இப்படம் 2ம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம்.
Stree 2
கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களின் லிஸ்டில் நம்பர் ஒன் இடத்தில் Stree 2 திரைப்படம் உள்ளது. ஷ்ரத்தா கபூர், பங்கஜ் திரிபாதி மற்றும் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அசத்தலான காமெடி, ஹாரர் திரைப்படமாகும். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.