IITs Join
IITs Join

நீங்களும் ஐஐடி- யில் சேர்ந்து படிக்கலாம்

5/5 - (1 vote)

ஐஐடியில் சேர்ந்த படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். ஆனாலும் சில காரணங்களால் அது நிறைவேறாமல் போகிறது. தற்போது ஐஐடியில் சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியான என்பிடெல் (தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம்)சென்னை ஐஐடி, ஜனவரி-ஏப்ரல் 2024 செமஸ்டருக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது.

கற்க விரும்புவோர் ஸ்வயம் (SWAYAM), என்பிடெல் (NPTEL) ஆகிய இணைய முகப்புகள் வாயிலாக பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். சான்றிதழ் தேர்வெழுத விரும்புவோருக்கு கட்டணம் ரூ.1,000 என்றும், NPTEL படிப்புகளுக்காக இதுவரை 2.5 கோடிக்கும் அதிகமானோர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

பொறியியல், அறிவியல், மானுடவியல், மேலாண்மைத் துறைகளில் 720-க்கும் மேற்பட்ட படிப்புகளுடன், இந்தச் செமஸ்டரில் 30 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மேம்பட்ட கற்றல் வாய்ப்பை வழங்க என்பிடெல் திட்டமிட்டுள்ளது.

இந்தச் சான்றிதழ் படிப்புகளில் சேர கடைசிநாள் – 19 பிப்ரவரி 2024 ஆகும். ஆர்வமுடையவர்கள் ஜனவரி 2024 செமஸ்டருக்கான பின்வரும் இணைப்பு வாயிலாக தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்- NPTEL- http://nptel.ac.in/ அல்லது SWAYAM- http://swayam.gov.in/ .

கற்க விரும்புவோர் ஸ்வயம், என்பிடெல் ஆகிய இணைய முகப்புகளில் கட்டணம் ஏதுமின்றி பெயர்களைப் பதிவுசெய்யலாம்.

விருப்பச் சான்றிதழ் தேர்வு எழுத விரும்புவோருக்கு கட்டணம் ரூ.1000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 2.5 கோடிக்கும் அதிகமானோர் என்பிடெல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.