Navyug எக்ஸ்பிரஸ்: Navyug Express இந்தியாவின் ஐந்தாவது மிக நீண்ட தூரம் ஆகும், இது பெரும்பாலான இந்திய மாநிலங்களைக் கடந்து செல்லும்.
இந்தியன் ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் சேவையாக உள்ளது. 28 மாநிலங்களையும் இணைக்கும் வகையில் பெரியளவிலான ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
பயணிக்க மக்கள் அதிகம் பயன்படுத்துவது ரயில்வே சேவையைதான். நாட்டின் அனைத்து பகுதிகளையும் ரயில் மூலம் இணைக்கும் வகையில் பெரியளவிலான கட்டமைப்பை இந்தியன் ரயில்வே கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியன் ரயில்வே 13 மாநிலங்களை கடந்து செல்லும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சுமார் நாட்டின் பாதி மாநிலங்களை கடந்து செல்லும் இந்த ரயில் பற்றி பார்க்கலாம்.
Train Name | Navyug Express |
---|---|
Train Number | 16687 |
Route | Navyug Express -16687 ( Mangalore Cntl to Jammu Tawi ) |
Train Number | 16688 |
Route | Navyug Express -16688 ( Jammu Tawi to Mangalore Cntl ) |
Classes | 2A, 3A, SL |
Service Days | Monday |
Stops | 60 |
Duration | 68 hrs 20 mins |
Type | Mail/Express |
Pantry | Yes |
ரயில் எண் 16687 என்பது மங்களூருக்கும் ஜம்முவிற்கும் இடையே இயங்கும் ரயில் ஆகும். மங்களூர் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது மற்றும் ஜம்மு ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. இரண்டு நகரங்களும் 3607 கிமீ தொலைவில் அமைந்துள்ளன.
காஷ்மீர் மாநிலத்தின்ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையம் முதல் மங்களூரு சென்ட்ரல் நிலையம், திருநெல்வேலி சந்திப்பு நிலையம் வரை இந்திய ரயில்வே துறையினரால் இயக்கப்படும் தொடருந்து நவ்யுக் அதிவிரைவு தொடருந்து ஆகும். இது இந்திய ரயில்வே துறையினரால் இயக்கப்படும் ஐந்தாவது மிக நீண்ட தொலைவு செல்லும் தொடருந்தாகும்.
கர்நாடகாவில் இருந்து ஜம்மூவிற்கு செல்லும் நவ்யுக் எக்ஸ்பிரஸ் பற்றிதான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து ஜம்மு தாவி வரை இந்த ரயில் செல்கிறது. கர்நாடகா மங்களூரில் இருந்து கிழம்பி கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம் வழியாக ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை சென்றடைகிறது.
நவ்யுக் எக்ஸ்பிரஸ் ரயில் வழியில் 12 மாநிலங்களில் மட்டும் நிற்கிறது. இதில் ஹிமாச்சல் பிரதேசம் மட்டும் நிற்காமல் செல்கிறது. தொடர்ந்து 4 நாட்கள் பயணிக்கும் இந்த ரயில் மொத்தமாக 13 மாநிலங்களை கடக்க 68 மணி 20 நிமிடங்கள் ஆகிறது. இந்தியாவில் நீண்ட தூரத்திற்கு பயணம் செய்யும் ரயிலில் இந்த நவ்யுக் எக்ஸ்பிரஸ் ரயில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
Pingback: கோடையில் தவிர்க்க வேண்டிய பத்து வகை உணவுகள் | ஆரோக்கியம் Latest News Stories from Thiruvarur
Pingback: திருவண்ணாமலை மகா தீபத்தை பார்க்க போறீங்களா ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு | செய்திகள் Latest News Stories fr