நாளுக்கு நாள் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணிகளுக்கு மேம்பட்ட சேவையை வழங்க இந்திய ரயில்வே பல வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில், இனி நீங்கள் நீண்ட வரிசையில் நின்றோ டிக்கெட் வாங்க தேவையில்லை, அதே போல செயலியில் எப்படி தகவல்களை டைப் பண்ணுவது என்று குழம்பாமல், சுலபமாக இனி நீங்கள் வாயால் பேசினாலே போதும் டிக்கெட் புக்கிங், PNR செக்கிங் மற்றும் டிக்கெட் ரத்து ஆகியவற்றை செய்ய ஒரு புதிய செயலியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது! அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்!
இனி நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை
முன்னதாக, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, இணையதளத்தில் உங்கள் தகவல்களை நிரப்ப வேண்டியிருந்தது. அதற்காக நீங்கள் தட்டச்சு செய்யும் உதவியைப் பயன்படுத்துவீர்கள், ஆனால் இந்த புதிய அம்சத்தின் உதவியுடன், நீங்கள் குரல் வழியாகவே, அதவாது பேசியே டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம். இந்த புதிய அம்சத்தின் மூலம், தகவல்களை நிரப்புவதில் உள்ள சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள்.
IRCTCயின் அசத்தல் செயலி
ஆனால் இப்போது இந்திய ரயில்வே டூரிசம் மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் (IRCTC) பயணிகள் டிக்கெட் முன்பதிவை எளிதாக செய்யும் வகையில், குரல் அடிப்படையிலான இ-டிக்கெட் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. IRCTC யின் சாட்பாட் Ask Disha 2.0 உதவியுடம் பயணிகளை இனி டிக்கெட்டுகளை எந்த சிரமமுமின்றி புக் செய்யலாம். டிக்கெட் புக்கிங் மட்டுமின்றி, டிக்கெட் ரத்து செய்தல், PNR செக்கிங் மற்றும் பல தகவல்களையும் பெறலாம்.
பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் தேவையில்லை
Ask Disha வாடிக்கையாளர்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உதவுகிறது மற்றும் வாடிக்கையாளர்கள் OTP சரிபார்ப்பு லாக்-இன் மூலம் பிற சேவைகளுக்கான ஆதரவைப் பெறலாம். IRCTC பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பயனர்கள் உள்நுழைய வேண்டிய அவசியமில்லை. உங்கள் குரலை மட்டுமே பயன்படுத்தினால் போதும்.
Ask Disha 2.0 இன் சிறப்பம்சங்கள்
- AskDISHA 2.0 (எப்பொழுதும் உதவி தேட டிஜிட்டல் தொடர்பு) என்பது செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) மற்றும் NLP அடிப்படையிலான மெய்நிகர் உதவியாளர் (ChatBot, VoiceBot) ஆகும்,
- இது பயனர்களுக்கு பணம் செலுத்துதல், ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளைச் செய்ய உதவுகிறது.
- ரயில் டிக்கெட்டுகள், போர்டிங் ஸ்டேஷனை மாற்றுதல், பணத்தைத் திரும்பப்பெறுதல் நிலையைச் சரிபார்த்தல், PNR நிலையைச் சரிபார்த்தல், சலுகைகளைப் பெறுதல் மற்றும் IRCTC வழங்கும் பல்வேறு சேவைகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க உதவுகிறது.
எப்படி Ask Disha வை உபயோகிப்பது?
இந்த AI கருவியை அணுக, நீங்கள் செய்ய வேண்டியது IRCTC இன் இணையதளம் அல்லது செயலியைத் திறக்க வேண்டும். AskDisha 2.0 லோகோவை அங்கே தேடவும். பின்னர் தேவையான விவரங்களை உள்ளிடவும், AI கருவி உங்களுக்கு மேலும் உதவும். மாற்றாக, மைக்ரோஃபோன் கருவியைக் கிளிக் செய்து குரல் கட்டளைகளைப் பயன்படுத்தி இந்த சாட்போட்டையும் பயன்படுத்தலாம்.
இதில் என்னவெல்லாம் நாம் செய்யலாம்
- ரயில் டிக்கெட்டை பதிவு செய்யலாம்
- PNR நிலையைச் சரிபார்க்கலாம்
- டிக்கெட்டை ரத்து செய்யலாம்
- பணத்தைத் திரும்பப்பெறும் நிலையைப் பெறலாம்
- போர்டிங் நிலையத்தை மாற்றலாம்
- முன்பதிவு வரலாற்றைச் சரிபார்க்கலாம்
- இ-டிக்கெட்டைப் பதிவிறக்கலாம்
- ERS ஐப் பதிவிறக்கலாம்
- இ-டிக்கெட்டை அச்சிட்டு பகிரலாம்