DMK Candidates List

மக்களவை தேர்தல் 2024 | திமுக வேட்பாளர்கள் பட்டியல்

5/5 - (3 votes)

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து வெளியிட்டு கொண்டுள்ளனர். அந்தவகையில் திமுக மக்களவை தேர்தலுக்கான தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

நாடு முழுவதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள ஒரு தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.

அதில் தமிழ்நாடு புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், I.N.D.I.A. கூட்டணித் தலைமையில் திமுக தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தக் கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன.

இதில் தாங்கள் போட்டியிடும் 21 மக்களவை தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலையும், அவர்கள் போட்டியிடும் தொகுதியினையும் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி,

2024 மக்களவை தேர்தல் திமுக வேட்பாளர் பட்டியல்:

தொகுதி திமுக வேட்பாளர் பட்டியல்
வட சென்னைகலாநிதி வீராசாமி
தென் சென்னைசுமதி (தமிழச்சி தங்க பாண்டியன்)
மத்திய சென்னைதயாநிதி மாறன்
காஞ்சிபுரம் (தனி)ஜி செல்வம்
ஸ்ரீபெரும்பதூர்டி ஆர் பாலு
அரக்கோணம்ஜெகத்ரட்சகன்
வேலூர்கதிர் ஆனந்த்
தருமபுரிஆ மணி
திருவண்ணாமலைசி என் அண்ணாதுரை
ஆரணிஎம் எஸ் தரணிவேந்தன்
கள்ளக்குறிச்சிமலையரசன்
சேலம்செல்வகணபதி
ஈரோடுகே ஏ பிரகாஷ்
நீலகிரிஆ ராசா
கோவைகணபதி ராஜ்குமார்
பொள்ளாச்சிஈஸ்வரசாமி
பெரம்பலூர்அருண் நேரு
தஞ்சாவூர்முரசொலி
தேனிதங்க தமிழ்செல்வன்
தென்காசிராணி ஸ்ரீகுமார்
தூத்துக்குடிகனிமொழி கருணாநிதி

இப்பட்டியலில் 11 புதிய முகங்கள், 3 பெண்கள், 2 முனைவர்கள், 2 மருத்துவர்கள், 2 ஒன்றிய செயலாளர்கள், 6 வழக்கறிஞர்கள் போட்டியிட வாய்ய்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

11 புதுமுகங்கள் யார்

தொகுதி திமுக வேட்பாளர் பட்டியல்
தருமபுரிஆ.மணி
ஆரணிதரணிவேந்தன்
கள்ளக்குறிச்சிதே. மலையரசன்
சேலம்டி.எம். செல்வகணபதி
ஈரோடுபிரகாஷ்
கோவைகணபதி ராஜ்குமார்
பொள்ளாச்சிஈஸ்வரசாமி
பெரம்பலூர்அருண் நேரு
தஞ்சாவூர்முரசொலி
தேனிதங்க தமிழ்செல்வன்
தென்காசிராணி ஸ்ரீகுமார்

Related Post