TNPSC Group 2 Exam
TNPSC Group 2 Exam

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத போறீங்களா தமிழக அரசின் அசத்தலான முடிவு

5/5 (7)

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நிலையில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப்-2 பதவிகளில் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் முதல்நிலைத் தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றி பெற்ற 57 ஆயிரத்து 641 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அழைக்கப்பட்டார்கள். அவர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 25-ந் தேதி எழுதி இருந்தார்கள்.

இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் கடந்தாண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது. முதன்மைத் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு நீண்ட தாமதத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. அரசு வெளியிட்ட தகவலின்படி, குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், குரூப்- 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 15:12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து குரூப்-2 தேர்வு முடிவுகள் 2024 ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில்தான் மீண்டும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நிலையில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. இந்த தேர்வுக்கு ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ம் தேதி கட்டணம் செலுத்த கடைசி நாள் ஆகும். 2327 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட உள்ளது. குரூப் 4 தேர்வில் இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் குருப் 2 தேர்வில் இதே முறை பயன்படுத்தப்பட உள்ளது. இந்த முறைப்படி ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து பின்னர் ஷீட்டில் அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலை தேர்வு செய்ய கூடாது. அப்படி குறித்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும். அதாவது மாற்றி சரியான விடையை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓஎம்ஆர் ஷீட்டில் எது சரியான விடையோ அதை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

1 Comment

Comments are closed