Mahalakshmi
Mahalakshmi

மகாலட்சுமியை வசியம் செய்யும் ஏலக்காய்

5/5 (1)

இந்த உலகத்தில் யாரிடம் பணமும், நகையும், செல்வ செழிப்பும் அதிகரித்து இருக்கிறதோ அந்த இடத்தில் மகாலட்சுமி தாயார் வாசம் புரிகிறார் என்பது பொருள்படும். எந்த இடத்தில் வறுமைகள் அதிகரித்து இருக்கிறதோ அந்த இடத்தில் அவளின் கடைக்கண் பார்வை கூட விழவில்லை என்பதுதான் அர்த்தம். அப்படி வறுமையில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த முறையில் ஏலக்காயை பயன்படுத்தி மகாலட்சுமி தாயாரை வசியம் செய்வது என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

திருப்பாற்கடலில் தோன்றியவளாக திகழ்பவள்தான் மகாலட்சுமி தாயார். பெருமாளின் மார்பில் நிரந்தரமாக குடியிருக்க கூடிய மகாலட்சுமி தாயார் தான் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான செல்வ செழிப்பிற்கும் அதிபதியாக திகழக்கூடியவள். மேலும் கிரகங்களின் அடிப்படையில் பணம் மற்றும் சுகபோகமான வாழ்க்கைக்கு அதிபதியாக திகழக்கூடிய சுக்கிரனின் அதிதேவதையாக மகாலட்சுமி தாயார் விளங்குவதால் மகாலட்சுமி தாயாரை வழிபட்டால் கண்டிப்பான முறையில் சுக்கிரனின் அருளும் நமக்கு கிடைக்கும் என்றுதான் பொருள்படும்.

அப்படி மகாலட்சுமி தாயாரை நாம் வழிபடும் பொழுது ஒரு சில சூட்சுமமான விஷயங்களை நாம் செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்கும். அப்படி சூட்சுவமான பரிகாரங்களை நாம் செய்யும் பொழுது மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான பொருட்களை பயன்படுத்த வேண்டும். அந்த பொருட்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் ஏலக்காய். ஏலக்காயை வைத்து பல பரிகாரங்களை நாம் செய்யலாம்.

ஒருவரின் வீட்டில் கல் உப்பு எந்த அளவிற்கு நிறைவாக இருக்க வேண்டுமோ அதே போல் ஏலக்காயும் நிறைவாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் தங்களால் இயன்ற அளவு ஏலக்காயை வாங்கி சேகரித்து வைப்பது மகாலட்சுமி தாயாரின் அருளை தரும் என்று கூறப்படுகிறது. அதில் ஒருவித பவித்திர தன்மை இருப்பதால்தான் தெய்வங்களுக்கு நெய்வேத்தியம் செய்யக்கூடிய பொருட்களில் ஏலக்காயை நாம் சேர்க்கிறோம். குறிப்பாக பெருமாளுக்கு கொடுக்கக்கூடிய தீர்த்தத்தில் ஏலக்காயை கண்டிப்பான முறையில் சேர்ப்பார்கள். அது மட்டுமல்லாமல் ஏலக்காயை மாலையாக கோர்த்து தெய்வங்களுக்கு சாற்றுவதும் வழக்கமாக தான் இருக்கிறது. இவை அனைத்தையும் கண்கூடாக பார்க்கும் பொழுது ஏலக்காயின் மகத்துவம் என்ன என்பது நம்மால் உணர முடியும்.

வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் இந்த வழிமுறையை நாம் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை ஒரு சிறிய செம்பு அல்லது பஞ்ச பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிறைய சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு அதில் ஒரே ஒரு ஏலக்காயை விதைகள் நசுங்கி வாசனை வரும் அளவிற்கு இடித்து அந்த தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீரை மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்துவிட்டு மகாலட்சுமி தாயாரின் அஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம் அல்லது மகாலட்சுமி தாயாரின் 108 போற்றிகள் இவற்றை கூறி மகாலட்சுமி தாயாருக்கு வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் முழுவதும் அந்த தண்ணீர் மகாலட்சுமி தாயாரின் பாதத்திலேயே இருக்கட்டும். மறுநாள் காலை எப்போதும் போல் வீட்டில் விளக்கேற்றி முடித்த பிறகு இந்த தண்ணீரை எடுத்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். குறிப்பாக நகைகள், பணங்கள் வைத்திருக்கும் இடத்தில் தெளிக்க வேண்டும். எங்கெல்லாம் தெளித்திருக்கிறதோ அங்கெல்லாம் மகாலட்சுமி தாயார் வசியம் செய்யப்படுவாள்.

மிகவும் எளிமையான இந்த சூட்சுமமான பரிகாரத்தை நாமும் நம்பிக்கையுடன் செய்து மகாலட்சுமி தாயாரை வசியம் செய்து செல்வ செழிப்புடன் நலமுடன் வாழலாம்.