கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர். ஐபிஎல் போட்டிகளில் அனல் பறப்பதால் ஒவ்வொரு வருடமும் இத்தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். இதனை பூர்த்தி செய்யும் விதமாக, ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்று (மார்ச்.22) சென்னையில் தொடங்க உள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இதனிடையே நேற்று மாலை (மார்ச்.21) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.
வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்தது . இந்நிலையில் சி.எஸ்.கே அணி தனது இரண்டாவது போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
நடப்பு ஐபிஎல்லில் சென்னையில் சி.எஸ்.கே அணி விளையாடவுள்ள அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே விற்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி சி.எஸ்.கே. ஆர்சிபி இடையேயான முதல் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. இணையதளம் முடங்கியதால் டிக்கெட் கிடைக்காமல் பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் மார்ச் 26-ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் டிக்கெட்டின் விலை ரூ,1700 லிருந்து ரூ.7500 ஆக இருந்த நிலையில், இந்த போட்டிக்கான அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
Comments are closed