Cyclone Fengal strengthens
Cyclone Fengal strengthens

வங்ககக்கடலில் வலுப்பெறும் ஃபெங்கல் புயல் சென்னை டூ நாகை ஹாட்ஸ்பாட்

5/5 (10)

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதிகனமழை பெய்யும் என்பதால் டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் தீவிரம் அடைந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் எச்சரித்துள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை தொடரும் என்றும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த புயல் எங்கே கரையை கடக்கும் என்பது குறித்தும் ஹேமச்சந்தர் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (26/11/2024) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இப்புயல் சின்னம் தற்போதைய நிலவரப்படி நாகப்பட்டினத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 600 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கே- தென்கிழக்கே 720 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழக்கே 800 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இப்புயல் சின்னம் அடுத்த 48 மணி நேரத்தில் பெயரிடக்கூடிய புயலாக மாறுவதற்கு சாதக சூழல் காணப்பட்டு வருகிறது. காலை முதல் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வரக்கூடிய அடுத்த இரண்டு மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பதிவாகும். கடலூர், புதுச்சேரி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விட்டு விட்டு கனமழை பதிவாகும்.

சென்னை, கடலூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்று முற்பகல் 11 மணி அளவில் மழை துவங்கும், விட்டு விட்டு மழை பதிவாகும் என்றும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் பதிவிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில், Fengal புயல் தயாராகி வருகிறது. வரவிருக்கும் வாரத்தில் பெரிய மழை நவம்பர் 26- டிசம்பர் 1 பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வரை ஹாட்ஸ்பாட் என்றும், சென்னை மற்றும் நாகப்பட்டினம் இடையே கடலூர் புதுச்சேரிக்கு அருகில் இந்த ஃபெங்கல் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் டெல்டா மாவட்டங்கள் இன்றும் நாளையும் அலர்ட்டாக இருக்க வேண்டும் என்றும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

1 Comment

Comments are closed