Conduct Annual Day In Govt Schools

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா: அரசு பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு செம குஷியில் மாணவ மாணவிகள்

5/5 - (1 vote)

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா: பள்ளி மாணவர்களுக்கு வெறும் புத்தகக் கல்வி மட்டுமே போதுமானது அல்ல. விளையாட்டு திறன்கள், மேலாண்மை திறன்கள், கலை திறன்கள் உள்ளிட்டவை அவசியம். இதற்காக கல்வி இணைச் செயல்பாடுகள் என்ற பெயரில் தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவற்றில் மாணவ, மாணவிகளை பங்கேற்க செய்வது தான் சவாலான காரியம்.

ஆண்டு விழா நடத்துவது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்காக கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கேற்ப விரைவாக தயாராக வேண்டியது அவசியம்.

ஏனெனில் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை அறியாமல் தயங்கி நிற்பர். மேடை அச்சம் பலருக்கும் இருக்கும். சரியான திறன்களை அடையாளம் காண முடியாமல் சிலர் தவிப்பர். இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தான் கல்வி இணைச் செயல்பாடுகள் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆண்டு விழாவிற்கு முக்கிய பங்குண்டு.

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆண்டு விழாவில் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்படும். அதாவது, பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவிக்கப்படும்.

இந்நிலையில் 2023-24ஆம் நிதியாண்டின் மானியக் கோரிக்கையின் போது அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது. அதில், அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழாவை சிறப்பான முறையில் நடத்த வேண்டும். இதில் மாணவர்களின் கலை, இலக்கிய, விளையாட்டு திறன்களை வெளிக்கொண்டு வர வேண்டும்.

இதற்காக ஆசிரியர்கள், பெற்றோர்கள் உறுதுணையாக செயல்பட வேண்டும். இந்த விழாவிற்காக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது. 2024 பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ளதால் விரைவாக ஆண்டு விழா நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

மார்ச் மாத தொடக்கத்திலேயே பொதுத்தேர்வுகள் தொடங்கிவிடும். எனவே தேர்விற்கு மாணவர்கள் தயாராக வேண்டியது அவசியம். இந்நிலையில் ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்ய வேண்டும். வரும் 10ஆம் தேதிக்குள் நடத்தி முடித்து விட வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகள் எடுக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பான முறையில் அரங்கம் அமைக்க வேண்டும். சிறந்த ஒளி, ஒலி அமைப்பை ஏற்படுத்தி ஆண்டு விழாவை கொண்டாட வேண்டும். இதையொட்டி பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post