Palani Murugan Vaikasi visakam
Palani Murugan Vaikasi visakam

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா

5/5 (16votes)

உலகப் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா வருகின்ற மே 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

வைகாசி விசாக திருவிழா 2024

முருகப்பெருமான் அவதரித்த திருநாளான வைகாசி விசாக திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் உலகப் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் 10 நாட்கள் வைகாசி விசாகத் திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பழனி முருகன் கோவில்

மாங்கனிக்காக தந்தை வைத்த போட்டியில் கோபித்துக் கொண்டு அனைத்தையும் துறந்து முருகப்பெருமான் குடியேறிய தலம் தான் பழனி. இது முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடாக உள்ளது. இங்கிருக்கும் முருகன் சிலை போகர் எனும் சித்தரால் நவபாசனத்தால் உருவாக்கப்பட்டது.

சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் தரைமட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. இங்கு 650 படிகளை கடந்து மலை உச்சியில் இருக்கும் முருகப்பெருமானை தரிசிக்கலாம். மேலும் இங்கு மழை மீது செல்ல வின்ச் மற்றும் ரோப் கார் வசதிகளும் உள்ளது.

பழனி வைகாசி விசாக திருவிழா

இங்கு ஆண்டு தோறும் தைப்பூசம் சூரசம்காரம் பங்குனி உத்திரம் வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு முருகன் அவதரித்த தினமான வைகாசி விசாகம் திருவிழா வருகின்ற மே 16ஆம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்குகிறது.

கொடியேற்றம் மே 16ம் தேதி

அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை புண்ணியாக வாஜனம் கொடிபட பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது. பத்து நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.

இந்த திருவிழாவில் தினசரி காலையில் தந்த பல்லக்கில் முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை திருவீதி உலா நடைபெறும். இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி, மயில் மற்றும் தங்கமயில், தங்க குதிரை புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.

தேரோட்டம் 22ம் தேதி

திருவிழாவின் ஆறாம் நாளான 21ஆம் தேதி இரவு ஆறு மணிக்கு மேல் பெரிய நாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து அடுத்த நாள் 22ஆம் தேதி வைகாசி விசாக நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி தோலுக்கினியான் வாகனத்தில் எழுந்து எழுந்தருள உள்ளார். அதை அடுத்து காலை 11:30 மணிக்கு மேல் திருத்தேரேற்றமும் மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தலை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற உள்ளது. 25ஆம் தேதி கொடி இறக்கத்துடன் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு பெற உள்ளது. இந்த விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

2 Comments

Comments are closed