GV Prakash - Sainthavi
GV Prakash - Sainthavi

நீண்ட நாள் பிறகு ஒரே மேடையில் ஜிவி பிரகாஷ்- சைந்தவி

4.9/5 (13)

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் தாங்கள் பிரிய போவதாக அறிவித்த பிறகு ஒரே மேடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் பாடிய பாடல் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்தில் சினிமா பிரபலங்கள் பலர் திடீரென்று விவாகரத்து அறிவித்து வருகிறார்கள். இவர்கள் எல்லாம் பிரிய மாட்டார்கள் என்று பார்த்து ரசித்த பிரபலங்கள் திடீரென்று பிரிவதை பார்த்து ரசிகர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அந்த வரிசையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தாங்கள் இருவரும் பிரிவதை அறிவித்திருந்தார்கள்.

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பல வருடங்களாக காதலித்து திருமணம் ஆன நிலையில் 11 வருடங்களில் பரஸ்பரமாக பிரியப் போகிறோம் என்று முடிவு எடுத்து அதை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தனர். இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருக்கும் ஜிவி பிரகாஷ் பல சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவிற்காக கொடுத்திருக்கிறார்

ஆடுகளம் படத்தில் ஜிவி பிரகாஷின் இசை பலராலும் பாராட்டப்பட்டது. அந்த படத்தில் இருந்து பெரிய அளவில் இவருக்கு பிரபலம் கிடைத்தது. அதுபோல ஜிவி பிரகாஷ் இசை அமைப்பில் சைந்தவியும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். சைந்தவியின் குரல் மற்றும் பாடலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சைந்தவி பாடிய பல பாடல்கள் மன கவலைகளை கரைத்து விடும். சில பாடல்கள் காதலை மேலும் பெருக்கெடுக்க வைக்கும். அதோடு ஒரு சில உணர்வுபூர்வமான பாடல்கள் மட்டும் கேட்கும் போதே கண்ணீரை வரவழைக்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் அசுரன் திரைப்படத்தில் இடம் பெற்ற எள்ளுவய பூக்கலயே பாடல் கண்ணீரை வரவழைக்கும். சுறா படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூர் ஜில்லா காரி பாடல் கேட்கும் போது டான்ஸ் ஆட வைக்கும்.

அதுபோல மதராசபட்டினம் திரைப்படத்தில் இடம் பெற்ற “ஆருயிரே ஆருயிரே” என்ற பாடல் காதலை பீல் பண்ண வைக்கும், அதுபோல “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் இடம் பெற்ற “விழிகளில் ஒரு வானவில்” என்ற பாடல், சகுனி திரைப்படத்தில் இடம் பெற்ற “மனசெல்லாம் மழையே”, சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இடம் பெற்ற “நெஞ்சுக்குள்ள”, தலைவா திரைப்படத்தில் இடம் பெற்ற “யார் இந்த சாலை ஓரம்”, தெகிடி திரைப்படத்தில் இடம்பெற்ற “விண்மீன் விதையில்” இப்படி பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

அதுபோல சின்னத்திரையிலும் பல சீரியலுக்கு சைந்தவி பாடல்கள் பாடி இருக்கிறார். ஒரு சிலர் காதலித்து திருமணம் செய்திருந்தாலும் இருவரும் பிரிந்த பிறகு ஒருவரை ஒருவர் குறை சொல்லி வருவதை பார்த்திருப்போம். ஆனால் சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் தம்பதி எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் குறை சொல்லியது கிடையாது.

அதுபோல தங்களை பற்றி வரும் வதந்திகளுக்கு கூட அடிக்கடி பதிலடி கொடுத்து விடுகிறார்கள். இந்த நிலையில் தான் இவர்கள் இருவரும் டிசம்பர் 7ஆம் தேதி மலேசியாவில் ஒரு இசை கச்சேரியில் ஒன்றாக கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது மயக்கம் என்ன திரைப்படத்தில் இடம்பெற்ற “பிறை தேடும் இரவிலே.. எதை தேடி அலைகிறார்” என்ற பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பாடி இருக்கிறார்கள்.

இந்த வீடியோ கிளிப்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்ததும் இந்த பாடலை கேட்கும் போதே அவ்வளவு அழகான காதல் தெரிகிறது.. ஆனால் இவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என்று வருத்தமாக அதிக கமாண்டுகள் வருகிறது.