Benefits Eating Papaya Fruit
Benefits Eating Papaya Fruit

பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

5/5 (4)

பப்பாளி பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல நன்மைகள் உள்ளது. பப்பாளி பழத்தின் விதைகளைத் தவிர இதன் மென்மையான ஆரஞ்சு நிற சதைப்பற்று உண்பதற்கு உகந்தது. சரி வாருங்கள் இந்த பதிவில் பப்பாளிப் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

கண்ணுக்கு ஆரோக்கியம் தரும்

பப்பாளி பழத்தில் விட்டமின் ஏ, லூட்டின் போன்ற ப்ளாவானாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இது கண் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும் அவை சேதமடையாமாலும் பாதுகாக்கும்.

கீழ்வாதத்தைத் தடுக்கும்

கீழ்வாதம் என்பது நம்மை பலவீனப்படுத்தும் நோய். இது விட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படுகிறது. பப்பாளியில் விட்டமின் சி உடன் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளதால், எலும்புகளுக்கு வலு சேர்த்து நம்மை திடமாக்கும். உடலில் விட்டமின் சி குறைந்தால் மூட்டு வலி வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே உங்களது உணவில் பப்பாளியை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முடி வளர்ச்சிக்கு உதவும்

பப்பாளி பழம் நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமின்றி கூந்தல் வளர்ச்சிக்கும் அதிகம் உதவும். இதில் நிறைந்து காணப்படும் விட்டமின் ஏ சத்து முடி வளர்ச்சியைத் தூண்டி கூந்தலை மென்மையாக பராமரிக்க உதவுகிறது. வாரம் ஒருமுறை பப்பாளி சாற்றை தலைக்கு தேய்ப்பது மூலமாக பொடுகுத் தொல்லை நீங்கும்.

கொழுப்பைக் குறைக்கும்

பப்பாளியில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளது. அவை நமது தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. இயற்கையாகவே உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைக்கும் பண்பு பப்பாளிக்கு உண்டு. இதனால் மாரடைப்பு அபாயம் நீங்கும்.

செரிமானம் மேம்படும்

பப்பாளி சாப்பிடுவது உங்களின் செரிமான சக்தியை மேம்படுத்தும். ஏனெனில் இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், செரிமானத்திற்கு தேவையான நொதிகள் அதிகம் இருக்கிறது.

சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்

சக்கரை வியாதி, இன்று பெரும்பாலானவர்களுக்கு வரும் சராசரி நோயாக மாறிவிட்டது. இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதில் பப்பாளி பழம் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தந்து உடல் சோர்வையும் குறைக்கிறது.

மாதவிடாய் பிரச்சனைகளை போக்கும்

பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் உடல் சோர்வு, வலி போன்றவை தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்த சமயத்தில் பெண்களுக்கு உடலில் பல சிக்கல்கள் ஏற்படும். எனவே பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதால் மாதவிடாய் தருணங்களில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கிறது.

பப்பாளி மருத்துவ பயன்கள்

  • பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும்.
  • எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
  • தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
  • நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
  • பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
  • பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
  • பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
  • பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
  • பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும்.
  • பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
  • பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
  • 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.
  • கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.
  • அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.
  • வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.
  • முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும்.
  • இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.
  • பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

1 Comment

Comments are closed