HalwaAlmondPineapple
HalwaAlmondPineapple

சுவையான அன்னாசி பாதாம் அல்வா

தலைப்புச் செய்திகள்

5/5 - (2 votes)

இந்திய இனிப்புகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது அல்வா. நாவில் வைத்தால் கரையும் இதன் சுவைக்காகவே பலரும் இதை விரும்பி உண்பார்கள். அந்தவகையில் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியானது பாதாம் மற்றும் அன்னாசிப்பழத்தை கொண்டு சுவையான அல்வாவை நிமிடங்களில் எப்படி செய்யலாம் என்றுதான்.

தேவையான பொருட்கள்

பொருட்கள்அளவு
அன்னாசிப்பழம்250 கிராம்
பாதாம்250 கிராம்
முந்திரி15 கிராம்
பால்கோவா150 கிராம்
சர்க்கரை125 கிராம்
நெய்150 கிராம்
ஏலக்காய் பொடி1/4 டீஸ்பூன்

செய்முறை

முதலில் அன்னாசிப்பழத்தின் தோலை நீக்கி விட்டு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து நெய் ஊற்றி உருகியதும் நறுக்கிய அன்னாசிப்பழத்தை சேர்த்து மிதமான தீயில் அதிலுள்ள ஈரம் வற்றும் வரை வதக்கவும்.

இதற்கிடையே ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரைக் சூடாக்கி அது நன்கு கொதித்ததும் அதில் பாதாம் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.

பின்னர் பாதாமின் தோலை உரித்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக மசிய அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இந்த பாதாம் பேஸ்ட்டை வதக்கிய அன்னாசியுடன் சேர்த்து ஹல்வா பதம் வரும் வரை தொடர்ந்து கலந்துவிடவும்.

பின்பு அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்துவிட்டு அதனுடன் பால்கோவா சேர்த்து அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறி விடுங்கள்.

இவை நன்கு கலந்து ஹல்வா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து நுணுக்கிய ஏலக்காய் பொடி தூவி கலந்துகொள்ளுங்கள்.

பின்னர் அல்வாவின் மேல் நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் கொண்டு அலங்கரித்து சூடாக அனைவருக்கும் பரிமாறுங்கள்.