purpose Fasting During Ramadan
purpose Fasting During Ramadan

ரமலான் மாதத்தில் நோன்பு திறப்பின் நோக்கம்

5/5 (4)

இஸ்லாமியர்களின் முக்கிய திருநாள் மற்றும் புனிதமான நாள் என்று ரமலான்கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரு மாத காலம் பட்டினி விரதம் இருந்து நோன்பு திறப்பது என்பது வழக்கமாக இருந்து வருகின்றது. மற்ற மாதங்களைத் தவிர ரமலான் மாதத்தில் மட்டும் நோன்பு எதற்காக திறக்கப்படுகின்றது என்பது குறித்து மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசலில் உள்ள இமாமான ஷேக் விளக்கம் அளித்துள்ளார்.

ரமலான் மாதம்

ரம்ஜான் மாதம் அதாவது ரமலான் மாதம் என்பது அரபிய மொழியில் பாவங்களை கரைத்து நன்மைகளை கொடுக்கக்கூடிய மாதம் என்று சொல்லப்பட்டு வருகின்றது. இந்த மாதத்தில் தான் இரவு முழுவதும் நின்று தொழுகை செய்து குர்ஆனை முழுவதுமாக படிக்கக்கூடிய மாதமாக ஏற்படுத்தி தருகின்றது. நோன்பு எவ்வாறு தோன்றியது என்றால் அல்லாஹ்வின் திருமறையில் இஸ்லாமிய மக்களே இதற்கு முன்பு இருந்த சமுதாயத்திற்கு நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்களுக்கும் நோன்பு கடமையாக பட்டிருக்கிறது.

நோன்பின் நோக்கம்

அதேபோல் நோன்பு வைப்பதற்கான காரணம் என்னவென்றால் இறைவன் இன்றி எதுவும் இல்லை என்பதால் இறைவனை நாடி தான் இந்த உலகில் எல்லாம் என்றும் அதேபோல் பட்டினி மற்றும் தாகத்தோடு நோன்பு இருப்பது எதற்கு என்றால் பிறரின் கஷ்டத்தை நினைத்து பார்ப்பது பசியோடு எவ்வாறு பட்டினியாக இருக்கின்றார்கள் என்பதை தாமும் நினைத்துப் பார்ப்பது. அதேபோல் இம்மாதத்தில் யார் ஒருவர் இரவு நேரத்தில் இறைவனை நாடி பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களின் பாவங்கள் அனைத்தும் போகும் என்றும் கூறப்பட்டுள்ளது.அதாவது நோன்பு என்பது பசித்திருப்பது மட்டுமல்ல, தாகி இருப்பது மட்டுமல்ல, தீமைகளை விட்டு விலகி இருந்து இறை அச்சத்தோடு வாழ வேண்டும் என்பதை நோன்பின் மூலமாக இறைவன் சொல்லித் தருகின்றான்.

யாரெல்லாம் நோன்பு திறக்கலாம்

குழந்தைகளுக்கு நோன்பு திறப்பது என்பது கட்டாயம் கிடையாது. வயது வந்த பெண்கள் மற்றும் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் நோன்பு திறப்பது என்பது கடமையாகும்.
அதேபோல் யார் ஒருவர் பிரயாணம் செய்கிறார்களோ அல்லது கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மட்டும் நோன்பு திறக்கக்கூடிய காலத்தில் நோன்பு திறக்காமல் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் சரியாகி விட்ட பிறகு மீண்டும் நோன்பினை திறக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.