ரமலான் மாதம் இந்தியாவில் எப்போது? ramadan-kareem
ரமலான் மாதம் இந்தியாவில் எப்போது? ramadan-kareem

ரம்ஜான் 2024 : புனித ரமலான் மாதம் இந்தியாவில் எப்போது துவங்குகிறது, ரமலான் காலண்டர் 2024

5/5 - (3 votes)

இஸ்லாமியர்களின் மிக புனிதமான மாதம் ரமலான் மாதமாகும். இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு அனுசரிக்கிறார்கள். முகம்மது நபிகள் பெருமகனார் திருக்குரானை முதன் முதலில் அருளிய மாதத்தை நினைவு கூறும் விதமான இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாக நோன்பு கடைபிடிக்கப்படுவது கருதப்படுகிறது.

இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். ரம்ஜான் பண்டிகைக்கு முன்புள்ள 30 நாட்கள் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் ரமலான் மாதம் என்று பெயர். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் தவிர மற்ற அனைவரும் தவறாமல் ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிக்க வேண்டும் என குரான் வலியுறுத்துகிறது. 

உடல் தேவைகளை மறந்து வழிபாடு மற்றும் ஒழுக்கத்தை கடைபிடிக்கும் மாதமாக ரமலான் மாதம் கடைபிடிக்கப்படுகிறது. பகல் முழுவதும் உணவு, தண்ணீர் ஏதும் இன்றி, இறை சிந்தனையிலேயே இருந்து, மாலையில் இப்தார் உணவுடன் நோன்பினை துறப்பார்கள். ரமலான் மாதம் முழுவதுமே வழிபாடு, தானம், ஒற்றுமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் மாதமாக உள்ளது. சூரிய உதயத்திற்கு முன் நோன்பை துவக்கி, சூரியன் மறையும் வரை நோன்பை கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் வழக்கம். நோன்பு கடைபிடிக்கும் காலங்களில் புகை பிடித்தல், மது அருந்துதல், பாலியல் உறவுகளில் ஈடுபடுதல், சண்டையிடுதல், புறம் பேசுதல், பாவ காரியங்களில் ஈடுபடுதல் உள்ளிட்டவைகள் நோன்பின் பலனை குறைத்து விடும் என்பதால் இஸ்லாமியர்கள் இவற்றை தவிர்த்து விடுகிறார்கள்.

நோன்பு துவங்குவதற்கு முன் எடுத்துக் கொள்ளப்படம் உணவிற்கு ஸஹர் எனவும், நோன்பிற்கு பிறகு எடுத்துக் கொள்ளப்படும் உணவானது இப்தார் என்றம் அழைக்கப்படுகிறது. ரமலான் மாதத்தில் பிரார்த்தனைகளை அதிகரிப்பது இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்லும் என அறிவுறுத்தப்படுகிறது. ரமலான் மாதத்தின் நிறைவு நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்று கூடி தொழுகை நடத்தி, வாழ்த்துக்களை பறிமாறிக் கொள்கிறார்கள்.

பொதுவாக பிறையை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமிய மாதங்கள், பண்டிகைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 11 ம் தேதி ரமலான் மாதம் துவங்குவதாக அரபு நாடுகளில் சொல்லப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், ஓமன், பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஐரோப்பா, அமெரிக்கா, துருக்கி, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் 2024ம் ஆண்டிற்கான ரமலான் மாதம் மார்ச் 11ம் தேதி துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்தியா, வங்கதேசம், இந்தோனேஷியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஒரு நாள் தாமதமாக மார்ச் 12ம் தேதி ரமலான் மாதம் துவங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. பிறை தெரிவதை பொறுத்தே ரமலான் மாதம் துவங்குவது மற்றும் ரம்ஜான் கொண்டாடப்படும் நாள் முடிவு செய்யப்படும் என்பதால் மெக்கா கமிட்டியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பிறை தெரிவதில் துவங்கி, அதற்கு பிறகு வரும் 29 அல்லது 30 நாட்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும்.

ரமலான் காலண்டர் 2024

இருந்து இப்தார் நடைபெறும் 

செஹ்ரிக்கான காலக்கெடு 

தேதிசெஹ்ரிஇப்தார் 
மார்ச் 11, 2024 காலை 5:17 AM மாலை 6:28 PM
மார்ச் 12, 2024 காலை 5:16 AMமாலை 6:28 PM
மார்ச் 13, 2024 காலை 5:15 AMமாலை 6:29 PM
மார்ச் 14, 2024 காலை 5:14 AMமாலை 6:29 PM
மார்ச் 15, 2024 காலை 5:13 AMமாலை 6:30 PM
மார்ச் 16, 2024 காலை 5:11 AMமாலை 6:31 PM
மார்ச் 17, 2024 காலை 5:10 AMமாலை 6:31 PM
மார்ச் 18, 2024 காலை 5:09 AMமாலை 6:32 PM
மார்ச் 19, 2024 காலை 5:08 AMமாலை 6:32 PM
மார்ச் 20, 2024 காலை 05:07 AMமாலை 6:33 PM
மார்ச் 21, 2024 காலை 05:05 AMமாலை 6:33 PM
மார்ச் 22, 2024 காலை 05:04 AMமாலை 6:34 PM
மார்ச் 23, 2024 காலை 05:03 AMமாலை 6:34 PM
மார்ச் 24, 2024 காலை 05:02 AMமாலை 6:35 PM
மார்ச் 25, 2024 காலை 05:00 AMமாலை 6:36 PM
மார்ச் 26, 2024 காலை 04:59 AMமாலை 6:36 PM
மார்ச் 27, 2024 காலை 04:58 AMமாலை 6:37 PM
மார்ச் 28, 2024 காலை 04:57 AMமாலை 6:37 PM
மார்ச் 29, 2024 காலை 04:55 AMமாலை 6:38 PM
மார்ச் 30, 2024 காலை 04:54 AMமாலை 6:38 PM
மார்ச் 31, 2024காலை 04:53 AMமாலை 6:39 PM
ஏப்ரல் 1, 2024 காலை 04:52 AMமாலை 6:39 PM
ஏப்ரல் 2, 2024  காலை 04:50 AMமாலை 6:40 PM
ஏப்ரல் 3, 2024 காலை 04:49 AMமாலை 6:41 PM
ஏப்ரல் 4, 2024 காலை 04:48 AMமாலை 6:41 PM
ஏப்ரல் 5, 2024 காலை 04:47 AMமாலை 6:42 PM
ஏப்ரல் 6, 2024 காலை 04:45 AMமாலை 6:42 PM
ஏப்ரல் 7, 2024காலை 04:44 AMமாலை 6:43 PM
ஏப்ரல் 8, 2024 காலை 04:43 AMமாலை 6:43 PM
ஏப்ரல் 9, 2024 காலை 04:41 AMமாலை 6:44 PM
2024க்கான ரமலான் காலண்டர்

குறிப்பு: நமாஸ் (ஸலாஹ்) மற்றும் இத்ஃப்தார் & செஹ்ரிக்கான நேரம் நகரத்திற்கு நகரம் வேறுபடும், சரியான நேரத்தை அறிந்து கொள்ள அருகிலுள்ள மஸ்ஜிதைத் தொடர்பு கொள்ளவும்.

ரமலான் புனித ரமலான்

ரமலான் புனித ரமலான்…

ரமலான் புனித ரமலான்…

ரமலான் புனித ரமலான்…

ரமலான் புனித ரமலான்…

இதயமெல்லாம் கனிந்து பணிந்து

இறையுனர்வில் சிறந்த மாதம்

ரமலான் புனித ரமலான்…

ரமலான் புனித ரமலான்…

ஈகை குனமும் இரக்க மனமும் மலர்ந்த மாதம்

நல்ல தியாக உணர்வும் ஞாய

குனமும் சிறந்த மாதம்

ஈகை குனமும் இரக்க மனமும் மலர்ந்த மாதம்

நல்ல தியாக உணர்வும் ஞாய

குனமும் சிறந்த மாதம்

வாகை சூடும் குர்ஆனை தந்த மாதம்

இந்த வையகமே வியக்கும் நோன்பு வந்த மாதம்

பசி என்பதை யாவருக்கும் உணர்த்தும் மாதம்

பசி என்பதை யாவருக்கும் உணர்த்தும் மாதம்

நல்ல பன்புடனே ஜக்காத்தை வழங்கும் மாதம்

வாரி வழங்கும் மாதம்….

ரமலான் புனித ரமலான்…

ரமலான் புனித ரமலான்…

பாங்குடனே லைலத்துல் கத்ர் கிடைத்த மாதம்

அன்று சங்கையான திரு குர் ஆன் வந்த மாதம்

பாங்குடனே லைலத்துல் கத்ர் கிடைத்த மாதம்

அன்று சங்கையான திரு குர் ஆன் வந்த மாதம்

ஆன்மீக ஞானமெல்லாம் உயரும் மாதம்

நல்ல மேன்மையோடு உடல்

நலம் கிடைக்கும் மாதம்

உகப்புடனே முப்பது நோன்பு நோர்கும் மாதம்

உகப்புடனே முப்பது நோன்பு நோர்கும் மாதம்

என்றும் உன்னதமான

வழிகாட்டும் கன்னிய மாதம்

நல்ல புண்ணிய மாதம்

ரமலான் புனித ரமலான்…

ரமலான் புனித ரமலான்

பார் போற்றும் பத்ர் யுத்தம் நடந்த மாதம்

தீய பகையை வீழ்த்தி

வெற்றி கனியை பெற்ற மாதம்

பார் போற்றும் பத்ர் யுத்தம் நடந்த மாதம்

தீய பகையை வீழ்த்தி

வெற்றி கனியை பெற்ற மாதம்

இனிமையான இஃப்தார் இருக்கும் மாதம்

கெட்ட ஷைத்தானை ஓட ஓட விரட்டும் மாதம்

பள்ளிகளெல்லாம் தராவிஹ் தொழுதிடும் மாதம்

பள்ளிகளெல்லாம் தராவிஹ் தொழுதிடும் மாதம்

அருள் அள்ளி அள்ளி தருகின்ற அற்புத மாதம்

ரஹமத் இறங்கிடும் மாதம்..

ரமலான் புனித ரமலான்…

ரமலான் புனித ரமலான்

சொர்கத்தின் கதவுகள் திறக்கும் மாதம்

அழகு சுந்தர ஹூருரின்கள்

மகிழ்ந்திடும் மாதம்

சொர்கத்தின் கதவுகள் திறக்கும் மாதம்

அழகு சுந்தர ஹூருரின்கள்

மகிழ்ந்திடும் மாதம்

நரகத்தின் கதவுகள் மூடும் மாதம்

கெட்ட இப்லீசை விழங்கிட்டு

தடுக்கும் மாதம்

நோன்பு வைத்தோர்

துவாக்களெல்லாம் ஏற்கும் மாதம்

நோன்பு வைத்தோர்

துவாக்களெல்லாம் ஏற்கும் மாதம்

உலகில் தான தர்மம் பெருக்கமுடன்

ஈத் முபாரக் சொல்லும் மாதம்

ஈத் முபாரக் சொல்லும் மாதம்..

ரமலான் புனித ரமலான்…

ரமலான் புனித ரமலான்…

ரமலான் புனித ரமலான்…

ரமலான் புனித ரமலான்…

ரமலான் நோன்பு எப்போது?

இஸ்லாமியர்கள் கிட்டதட்ட ஒரு மாத காலம் ரமலான் நோன்பினை கடைபிடிப்பது வழக்கம். இஸ்லாமிய நாட்காட்டியின்படி ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தின் அனைத்து நாட்களிலும் காலை சூரிய உதயத்திற்கு முன்பே நோன்பினை துவங்கி விடுவார்கள். சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமலும், நீர் அருந்தாலும் நோன்பு கடைபிடிப்பார்கள்.

Read: Ramadan 2024 in United Arab Emirates | Abu Dhabi | Sharjah

ரமலான் என்றால் என்ன அர்த்தம்?

ரமலான் நோன்பு (Sawm, அரபு மொழி: صوم‎‎) என்பது இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இசுலாமியர்களால் நோற்கப்படும் நோன்பு ஆகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்.

ரமலான் மாதம் யாருடைய மாதம்?

ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியில் புனிதமான மாதம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களால் கொண்டாடப்படுகிறது.