பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

5/5 - (3 votes)

கிராமங்கள் வழியே பயணம் செய்யும்போது இந்த பனங்கிழங்கை ( Palm Sprouts ) காணாமல் கடக்க முடியாது. குறிப்பாக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரைதான் பனங்கிழங்கு சீசன். பனங்காயை மண்ணில் புதைத்து அது குருத்தாக வளரத்தொடங்கும்போது பிடுங்கிவிடுவார்கள். அவ்வாறு பிடுங்கப்படும் பனை மரத்தின் வேர்களைதான் பனங்கிழங்காக நாம் சாப்பிடுகிறோம். இந்த பனங்கிழங்குகள் வெறும் சுவையை மட்டும் தருவதல்ல.. எண்ணற்ற நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பனங்கிழங்கு நல்ல பலன் அளிக்கிறது. விட்டமின் சி நிறைந்திருப்பதால் நோய் தொற்றுகளை எதிர்த்துப்போராட உதவும் வெள்ளை இரத்த செல்களை அதிகரிக்கச் செய்கிறது

நார்ச்சத்து நிறைந்தது :

பனங்கிழங்கு நார்ச்சத்துக்கு மூல ஆதாரமாக உள்ளது. குடல் அழற்சி, வயிற்று மந்தம், மலச்சிக்கல், செரிமானமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு பனங்கிழங்கு சிறந்தத உணவு.

கால்சியம் சத்து நிறைந்தது :

தசை வளர்ச்சிக்கும், வலு பெறுவதற்கும் பனங்கிழங்கு மிகவும் நல்லது. எலும்புகளின் உறுதி தன்மைக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் பனங்கிழங்கில் தக்க பலன்கள் கிடைக்கின்றன. இதனால் வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள், எலும்புப்புரை, எலும்பு மஜ்ஜை, மூட்டு அழற்சி போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

குறைவான கிளைசமிக் இண்டெக்ஸ் :

உணவில் உள்ள கார்போஹைட்ரேட் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்து கிளைசமிக் இண்டெக்ஸ் கணக்கிடப்படுகிறது. அந்தவகையில் பனங்கிழங்கில் குறைவான கிளைசமிக் இண்டெக்ஸ் இருப்பதால் மெதுவாக செரிமானம் செய்து குளுக்கோஸ் அளவையும் மெதுவாகவே உயர்த்துகிறது. எனவேதான் இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

புரோட்டீன் நிறைந்தது :

உடல் செல்களுக்கு புரோட்டீன் மிகவும் அவசியம். அதேசமயம் என்சைம், ஹார்மோன்கள் போன்ற உடலில் முக்கிய கெமிக்கல்களை உற்பத்தி செய்வதற்கும் புரோட்டீன் அவசியம். எனவே உங்களுக்கு புரோட்டீன் பற்றாக்குறை இருந்தால் பனங்கிழங்கு சிறந்த ஆதாரமாக இருக்கும்.

செரிமானம் :

பனங்கிழங்கு உணவு செரிமானத்திற்கு தேவைப்படும் என்சைமை உற்பத்தி செய்வதால் செரிமானம் சீராக இருக்கும். அதோடு உணவின் ஊட்டச்சத்து உறிஞ்சலும் வேகமாக இருக்கும்.

வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் :

பனங்கிழங்கில் இருக்கும் புரதச்சத்து ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் அத்தியாவசிய தேவையாக உள்ளது.அதாவது உடலின் செல்களை பராமரிப்பது, உறுப்புகளை பழுது நீக்கம் செய்வது, சருமத்தை புத்துணர்ச்சியாக்குவது, எலும்பு வளர்ச்சியை ஊக்குவிப்பது, தசை வளர்ச்சியை மேம்படுத்துவது என அனைத்தையும் செய்வதற்கு புரோட்டீன் முக்கிய பங்காற்றுகிறது. அது பனங்கிழங்கில் நிறைவாக இருப்பதால் வளர்ச்சிதை மாற்றத்தில் எந்த இடையூறும் இருப்பதில்லை.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது :

உங்களுக்கு அனீமியா எனப்படும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது எனில் பனங்கிழங்கு சிறந்த உணவாக இருக்கும். இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் உடல் சோர்வு, கவனமின்மை, குமட்டல், தலைவலி மற்றும் வயிற்று தொந்தரவுகள் இருக்கிறது எனில் இவை அத்தனைக்கும் பனங்கிழங்கில் பலன் கிடைக்கும். இது சிவப்பு இரத்த செல்களை பராமரித்து உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளிக்கிறது. இதனால் உடலின் இரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜனும் கிடைக்கிறது.

உடல் எடை குறைப்பு :

ஒரு சில உணவுகள் மட்டுமே அதிக ஊட்டச்சத்தும் குறைவான கலோரியும் கொண்டிருக்கும். அந்த வகையில் பனங்கிழங்கு மிகச்சிறந்த உணவு. எனவே நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள் எனில் பனங்கிழங்கு நல்ல டயட் உணவாக இருக்கும். நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதால் நீண்ட நேரம் பசி இல்லாமல் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். இதனால் தேவையற்ற க்ரேவிக்ஸை தவிர்க்கலாம்.

இதய ஆரோக்கியம் :

பனங்கிழங்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிடிற்கு சிறந்த மூலமாக இருப்பதால் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவாக இருக்கிறது. இதனால் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைவும் கணிசமாக குறைக்கிறது. ஒமேகா-3 இருந்தாலே நோய் அழற்சி பிரச்சனைகளுக்கும் பலன் தரும். எனவே இயற்கையான முறையில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பனங்கிழங்கு சிறந்ததாக உள்ளது. பொட்டாசியம் தேவையையும் பனங்கிழங்கு பூர்த்தி செய்வதால் இரத்தக்குழாய் அடைப்பையும் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்க பனங்கிழங்கு உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பனங்கிழங்கு நல்ல பலன் அளிக்கிறது. விட்டமின் சி நிறைந்திருப்பதால் நோய் தொற்றுகளை எதிர்த்துப்போராட உதவும் வெள்ளை இரத்த செல்களை அதிகரிக்கச் செய்கிறது. விட்டமின் ஏ இருப்பதால் ஆண்டி ஆக்ஸிடண்ட் கிடைக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி வேண்டுமெனில் பனங்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம்.

புற்றுநோயை தடுக்கிறது :

இயற்கையான முறையில் ஆண்டி ஆக்ஸிடண்டை அள்ளித்தரும் பனங்கிழங்கு புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் போராட உதவுகிறது. விட்டமின் சி, விட்டமின் ஏ, அமினோ ஆசிட், புரோட்டீன் என அனைத்தும் ஒன்று சேர கிடைப்பது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.

I am Vimal - Versatile blog writer with a flair for transforming ideas into engaging narratives. Crafting content that informs, inspires, and captivates readers on a diverse range of topics.

You may also like...