பிரசாரத்தை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின் 40 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம்

5/5 - (2 votes)

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் இன்று சூறாவளி பிரச்சாரத்தை தொடங்குகிறார். தினமும் 2 தொகுதிகள் என 40 தொகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார் ஸ்டாலின்.

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் தி.மு.க நேரடியாகப் போட்டியிடுகிறது. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திமுக கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. காங்கிரஸ் கட்சி, விருப்ப மனுக்களை பெற்றுள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் மேலிடத்திற்குச் சென்றுள்ளது. நாளை இரவு தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம் திமுக தலைமைக் கழகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 22ஆம் தேதி முதல் தினமும் 2 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் ஸ்டாலின்.

வரும் 22ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஸ்டாலின். சென்னையில் அடுத்த மாதம் 17ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார் ஸ்டாலின். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நேரில் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் விவரம்:

தேதிமாவட்டம்
22.03.2024திருச்சி,பெரம்பலூர்
23.03.2024தஞ்சை, நாகை
25.03.2024கன்னியாகுமரி, திருநெல்வேலி
26.03.2024தூத்துக்குடி, இராமநாதபுரம்
27.03.2024தென்காசி, விருதுநகர், சேலம்
29.03.2024தருமபுரி, கிருஷ்ணகிரி
30.03.2024வேலூர், அரக்கோணம்
31.03.2024திருவண்ணாமலை, ஆரணி
02.04.2024மதுரை, சிவகங்கை
03.04.2024தேனி, திண்டுக்கல்
05.04.2024திருப்பூர், நீலகிரி
06.04.2024கோவை, பொள்ளாச்சி
07.04.2024புதுச்சேரி
09.04.2024திருவள்ளூர், வடசென்னை
10.04.2024காஞ்சிபுரம், திருபெரும்புதூர்
17.04.2024தென்சென்னை, மத்திய சென்னை
M.K.Stalins-election-campaign-tour-1024x576 பிரசாரத்தை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின் 40 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம்

I am Vimal - Versatile blog writer with a flair for transforming ideas into engaging narratives. Crafting content that informs, inspires, and captivates readers on a diverse range of topics.

You may also like...