Kanda Guru Kavasam
Kanda Guru Kavasam

கந்த குரு கவசம் பாடல் வரிகள்

5/5 - (3 votes)

நாளும் கோளும் செய்வதை போல, நல்லவர்கள் கூட செய்ய மாட்டார்கள் என்பது பழமொழி. அந்த வகையில் இன்று முருகனுக்கு உரிய செவ்வாய்க்கிழமை, கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து இருக்கிறது. இந்த நாளின் அற்புதத்தை வார்த்தையால் சொல்ல முடியாது. இன்றைய தினம் நீங்கள் செய்யக்கூடிய இறை வழிபாடு உங்களுக்கு கோடி மடங்கு பலன் தரும். கந்தன் அருள் கிடைக்க, கந்த குரு கவசத்தில் இருந்து எடுக்கப்பட்ட 10 பாடல் வரிகளை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்று மாலை முடிந்தவர்கள் முருகன் கோவிலுக்கு சென்று, முருகருக்கு விளக்கு போட்டு இந்த மந்திரத்தை முருகன் கோவிலில் அமர்ந்து படிக்கலாம். முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே முருகப்பெருமானுக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, கஷ்டங்களை தீர்த்து வை கந்தா என்ற சொல்லி இந்த பாடலை படித்தாலும், உங்களுடைய கஷ்டங்கள் தீரும்.

முருகனுக்கு நெய் விளக்கு, நல்லெண்ணெய் விளக்கு, வெற்றிலை விளக்கு, ஆறு விளக்கு, அல்லது ஒரே 1 விளக்கு ஏற்றினால் கூட போதும். எத்தனை விளக்கு ஏற்றுகின்றோம் என்பது முக்கியமில்லை. எவ்வளவு நம்பிக்கையோடு அந்த விளக்கை ஏற்றி வழிபாடு செய்கின்றோம் என்பதில் தான் பலன் நமக்கு கிடைக்கும். எட்டுத்திக்கில் இருந்து வரக்கூடிய பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய சக்தி இந்த கந்த குரு கவச பாடல் வரிகளுக்கு உள்ளது. கந்த குரு கவசம் ரொம்பவும் பெரிய பாடல். அதை முழுமையாக, சாதாரண மனிதர்களால் படிக்க முடியாது. ஆனால் முருக பக்தர்கள் அதை சுலபமாக படித்து விடுவார்கள். தேவைப்படுபவர்கள் இந்த கந்த குரு கவசத்தை இன்று வீட்டில் ஒலிக்கச் செய்யலாம். இருந்தாலும் கந்தனை நினைத்து மனம் உருகி நம் வாயால், நான்கு வரிகளை பாடும்போது கிடைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் இல்லை. சரி இன்றைய தினம் நீங்கள் படிக்க வேண்டிய அந்த பத்து வரிகள் என்ன.

கந்த குரு கவசம் வரிகள்

ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்

தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்கு

திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்

சத்ரு பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு

கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்

தென்கிழக்கு திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்

தென்திசை யிலுமென்னைத் திருவருளால் காப்பாற்றும்

தென்மேற்கிலு மென்னைத் திறல்வேலால் காப்பாற்றும்

மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரக்ஷிப்பாய்

வடமேற் கிலுமென்னை மயிலோனே ரக்ஷிப்பாய்

வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்

வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே

பத்துதிக்குத் தோறுமெனை பறந்துவந்து ரக்ஷிப்பாய்

என்சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்

இதுதான் அந்த பாடல் வரிகள்

எல்லோருக்கும் புரியும்படி இருக்கக்கூடிய பாடல் வரிகள் தான். கந்தனை நினைத்து கலங்காமல் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். கலங்க வைக்கும் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் காணாமல் வெகு தூரம் சென்று விடும். இன்றைய தினம் முருகர் வழிபாடு செய்பவர்கள் அனைவருக்கும் கந்தன் கருணை கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.