வெயில் இன்னமும் வாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், ஏசி தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டது. ஏசி ஓடினாலும்கூட, கரண்ட் பில் மிச்சப்படுத்த இதோ குட்டி குட்டி டிப்ஸ்.
அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டிருப்பதால், அதிக வெப்பமும் புழுக்கமும் இன்னமும் நீடிக்கிறது.. கோடை மழை அவ்வப்போது பெய்து வந்தாலும், வெயில் தாக்கம் என்னவோ கட்டுக்கடங்காமல் உள்ளது.. அதனால்தான், வீடுகளில் AC, Air Cooler களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது.
ஏர்கூலர்
ஏர் கூலருடன் ஒப்பிடும்போது AC-க்கு செலவு சற்று அதிகம் என்றே சொல்லலாம்.. கரண்ட் பில்லும் அதிகமாகிவிடுகிறது.. ஏசியை அதிகமாக பயன்படுத்தினாலும், கரண்ட் பில் குறைவாக வரணுமா? இதோ ஒரு சில டிப்ஸ்களை பாருங்கள். ACயின் ஃபில்டரை அடிக்கடி சுத்தம் செய்வதாலும், ஏசியை முழுமையாக சர்வீஸ் செய்வதாலும் கரண்ட் பில் மிச்சமாகும்.. ஏனென்றால், இந்த ஏர் ஃபில்டர்களில் தூசி சேரும்போதும் அதன் கூலிங் திறன் குறைந்து, மின் இழுவையும் அதிகப்படுத்திவிடுகிறதாம்.
ஜன்னல்கள்
அதேபோல, ஏசி ரூம் கதவு, ஜன்னல்களை அடிக்கடி திறக்கக்கூடாது. காரணம், அனல் காற்று உள்ளே வந்துவிட்டால், மீண்டும் அறை முழுவதும் ஜில் காற்று பரவ நேரம் பிடிக்கும். இதனால் கரண்ட் பில் அதிகமாகிவிடும். ஏசியுடன் சேர்த்து சீலிங் ஃபேனையும் ஓடவிட்டால், குளிர்ந்த காற்று விரைவில் அறை முழுவதும் பரவிவிடும்.. இப்படிப்பட்ட சூழலில், மின்துறை அதிகாரிகள், ஏசிகளை பயன்படுத்துவது குறித்து ஒருசில டிப்ஸ்களை தருகிறார்கள்.. அதாவது, ஏசியை பொறுத்தவரை, ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும்போதும், 6 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.
வெப்பநிலை
எப்போதுமே, குறைந்த வெப்பநிலையில் ஏசி-யை வைக்காமல் 16 அல்லது 18 டிகிரியில் வைக்க வேண்டுமாம்.. மனிதனுக்கு தேவைப்படும் சராசரி வெப்பநிலையானது 24 டிகிரி என்பதால்தான், இந்த 24 அளவிலேயே ஏசியை வைத்திருக்க சொல்கிறார்கள். குறைந்தது 25 லிருந்து 27 டிகிரி செல்சியஸில் ஏசி பயன்படுத்தும்போது, மின்பற்றாக்குறையும் ஏற்படாது என்கிறார்கள். ஏசி பயன்படுத்தும்போது, ஏசியின் ரிமோட்டையும் சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும்.. ரிமோட்டில் ஏசி ஆன்செய்யும் போது, டைமரை செட் செய்து கொள்ள வேண்டும். அதாவது, அறை முழுவதும் குளிர்ந்ததுமே, ஏசி தானாகவே அணைந்து விடும்.
ரிமோட் கன்ட்ரோல்
அதேபோல, ஏசியை ரிமோட் கண்ட்ரோலில் மட்டும் ஆப் செய்யக்கூடாதாம்.. ஸ்டெபிலைசரின் சுவிட்சையும் சேர்த்து ஆப் செய்ய வேண்டும் என்கிறார்கள்.. இதனால் மின்சாரம் கட்டணத்தை சுலபமாக சேமிக்க முடியும் என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் அறிவுறுத்தியிருக்கிறது.
ஏசி ரிமோட்டில் ஆஃப் செய்தாலும்கூட, அதன் பயன்பாடு இருந்துகொண்டுதான் இருக்கும்.. டைமர் செட் செய்த பிறகு ஏசி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகே, ஸ்லீப் மோடிற்கு செல்லுமே தவிர முழுமையாக ஆஃப் செய்யப்படுவதில்லை.. எனவே, ஸ்டெபிலைசர் சுவிட்சை ஆப் செய்தால் மட்டுமே கரண்ட் பில் அதிகம் வருவதை குறைக்க முடியும் என்று அதிகாரிகள் உறுதியாக சொல்கிறார்கள்..!!