12 ID proof vote in elections
12 ID proof vote in elections

தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டிய 12 ஐடி ஆதார ஆவணங்கள்

5/5 (15votes)

நாளை தேர்தலில் வாக்களிக்க செல்லும்போது எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.. நாளை மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்காளா் அடையாள அட்டை உள்பட வாக்காளரை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே வாக்களிக்க முடியாது. பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்தால் மட்டுமே வாக்களிப்பது சாத்தியமாகும்.

இதற்கு தோ்தல் ஆணையத்தின் வெப்சைட்டை பாா்வையிட்டால் போதும். அதில், உங்களது வாக்காளா் அடையாள அட்டை எண் அல்லது வாக்காளா் பெயா் மற்றும் தொகுதி அல்லது செல்போன் நம்பரை பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம். அதேபோல, வழக்கமாக ஓட்டுப்பதிவின் போது, வாக்காளர்கள் அனைவரும் தங்களின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை, வாக்குச்சாவடியில் காண்பிக்க வேண்டும். அப்போதுதான் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒருவேளை, வாக்காளர் புகைப்பட அட்டையை அளிக்க முடியாத வாக்காளர்கள், தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க 12 வகையான ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த ஆவணங்கள்

இவைகள்தான்: –

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை
  • போட்டோவுடன் கூடிய பேங்க் மற்றும் போஸ்ட் ஆபீஸ் பாஸ் புத்தகங்கள்
  • தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை
  • வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை
  • தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
  • போட்டோவுடன் கூடிய பென்சனர் சர்டிபிகேட்
  • மத்திய, மாநில அரசுகள்/பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை
  • பாராளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை

இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை, வாக்காளர்கள் எடுத்துச்சென்று, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் காண்பித்து வாக்கு செலுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.