கொரோனா தொற்று காலத்தில் ரயில் கட்டணத்தைக் கூட்டிய ரயில்வே துறை இப்போது மூன்றில் 1 மடங்கு குறைத்துள்ளது. இதனால் கொரோனா காலத்திற்குப் பின் மீண்டும் இப்போதுதான் பயணிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்று காலத்திற்கு முன்பு குறைந்தபட்ச ரயில் கட்டணம் ரூ.10 ஆக இருந்தது. ஆனால் கொரோனாவால் ஊரடங்கு போடப்பட்ட காலத்தில் அவ்வளவாகப் பயணிகள் வராததாலும் இருக்கை குறைக்கப்பட்டதாலும் கட்டண விலை அதிகரித்தது. அதாவது ரயில் கட்டணம் 10லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டது. ஊரடங்கு காலத்தில் இது சிரமமாக இல்லையென்றாலும் ஊரடங்கு முடிந்தபின், மக்கள் பயணிக்க ஆரம்பித்த பின் இது அவர்களுக்கு மிகவும் சிரமமாக அமைந்தது. சாதாரண மக்கள் மற்றும் தினக்கூலி மக்கள் தினசரி வேலைகளுக்குச் செல்லும்போது இந்த கட்டணத்தால் அவதிப்படவே செய்தனர்.
மீண்டும் பழைய முறைக்கு ரயில் டிக்கெட் விலை குறைக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட இந்த கட்டண விலை உயர்வைக் குறைக்கச் சொல்லி பயணிகள் ஊரடங்கு முடிந்த முதலே வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ரயில்வே துறை அது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா காலத்திற்கு முன் இருந்த கட்டணம் ரூ10 ஐ மீண்டும் இப்போது கொண்டுவந்துள்ளது. ஆகையால் அதிகபட்ச விலை ரூ30 லிருந்து தற்போது மூன்றில் ஒரு பங்கு குறைத்து ரூ10 ஆக குறைத்துள்ளது ரயில்வே துறை. இது பயணிகளுக்கு மிகவும் வசதியாக அமைந்தது.
இது சிலருக்கு நிம்மதி அளிப்பதாகவும், சிலர் இந்த கட்டணக் குறைப்பு மக்களவை தேர்தல் நெருங்கியதால்தான் மத்திய அரசு அறிவித்துள்ளது எனவும் கூறுகின்றனர்.
நேற்று முதலே இந்த பயணக் கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது. ஆயினும் அதி விரைவு ரயில்களுக்கு எந்த கட்டண குறைப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.