Heavy Rainfall At Delta Districts
Heavy Rainfall At Delta Districts

டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் டெல்டா வெதர்மேன் எச்சரிக்கை

5/5 (9)

டெல்டா மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் எச்சரித்துள்ளார். சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பதிவாகும் என்றும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரம் அடைந்து கரையை நெருங்கி வருவதால் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வலுவடைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இதையடுத்து இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வரும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் இன்று டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரித்திருந்தது.

டெல்டா வெதர்மேன் எச்சரிக்கை

இந்நிலையில் மழை மற்றும் புயல் குறித்த எச்சரிக்கைகளை கொடுக்கும் தனியார் வானிலை ஆர்வலரான டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கை மற்றும் தென்மேற்கு வங்ககடல் நோக்கி நகர்ந்த நன்குமைந்த தாழ்வு பகுதி, மேலும் தீவிரமடைந்து டெல்டா கடற்கரையில் நிலைக்கொள்ளும என தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழை

மேலும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்திற்கு அதீத கனமழை பெய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இன்று (11.12.2024) இரவு 7 மணி முதல் நாளை (12.12.2024) இரவு 7 மணி வரை பரவலாக தொடர் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களிலும் விட்டு விட்டு கனமழை பதிவாகும் என்றும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

13 ஆம் தேதி இரவு வரை நீடிக்கும்

காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தரைக்காற்று இயல்பிற்கு மாறாக வீசும் என்றும் டிசம்பர் 11 ஆம் தேதி துவங்கியுள்ள நான்காம் சுற்று மழை டிசம்பர் 13ம் தேதி இரவு வரை டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நாளை முதல் உள் மாவட்டங்களிலும் மழை அதகரிக்கும் என்றும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.