World Chess Championship Winner
World Chess Championship Winner

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடரில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி

4.9/5 (10)

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடரில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். உலகில் மிகவும் இளம் வயதில் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற நபர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். யார் இந்த குகேஷ்.. இவர் கடந்து வந்த பாதை என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த 2006ம் ஆண்டு மே 29ம் தேதி சென்னையில் பிறந்த இவரது முழு பெயர் குகேஷ் தொம்மராஜு.. இவரது தந்தை டாக்டர். ரஜினிகாந்த் காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர். தாயார் டாக்டர் பத்மா ஒரு மைக்ரோபயாலஜிஸ்ட் ஆவர். இவர் தனது ஏழு வயதில் இருந்தே செஸ் பயிற்சி எடுத்து வருகிறார்.

கனவு

தொடக்கம் முதலே செஸில் இவரது திறன் பலரையும் வியக்க வைப்பதாக இருந்தது. அப்போதே பல போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றார். அதைத் தொடர்ந்து வார இறுதி நாட்களில் போட்டி தொடர்களில் குகேஷ் பங்கேற்கத் தொடங்கினார். அதிலும் கூட அவருக்கு வெற்றி மீது வெற்றிகளே குவிந்தது. உலகின் இளம் வயதில் செஸ் சாம்பியன்ஷிப் வெற்றியாளர் என்ற சாதனையைப் படைக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த பள்ளிகளுக்கான ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்ப் தொடரில் 9 வயதுக்குட்பட்ட பிரிவில் குகேஷ் வெற்றி பெற்றார். அவர் வென்ற முதல் மிக முக்கிய தொடர் இதுவாகும். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடந்த 12 வயதுக்குப்பட்டோருக்கான பிரிவில் உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் குகேஷ் வென்றார்.

ஐந்து பதக்கங்கள்

தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட குகேஷ், வெற்றி மீது வெற்றிகளைக் குவித்து வந்தார். 2018ல் நடந்த ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தனிநபர் மற்றும் குழு போட்டி என மொத்தம் 5 தங்கப் பதக்கங்களை அவர் வென்றார்.

2017 மார்ச் மாதம் நடந்த 34வது கேப்பேள்ள கிராண்ட் ஓபன் (Cappelle-la-Grande Open) செஸ் தொடரில் அவர், சர்வதேச மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். இந்த பட்டத்தைப் பெறும் போது அவருக்கு வயது வெறும் 12. செஸ் வரலாற்றிலேயே அவரை விட இருவர் மட்டுமே குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஸ்வநாதன் ஆனந்தை ஓவர்டேக்

அத்துடன் அவரது சாதனை நிற்கவில்லை. சொல்லப்போனால் அதன் பின்னரே அவரது பாய்ச்சல் அசுர பாய்ச்சலாக இருந்தது. 2023 ஆகஸ்ட் மாதம், 17 வயதில் செஸ் ரேங்கிங்கில் 2750 புள்ளிகளைப் பெற்றார். இதன் மூலம் இளம் வயதில் 2750 புள்ளிகளைப் பெற்ற நபர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அதற்கு அடுத்த மாதமே அவர் விஸ்வநாதன் ஆனந்தை விட அதிக புள்ளிகளைப் பெற்றார். 37 ஆண்டுகளாக அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனை விஸ்வநாதன் ஆனந்த்திடம் இருந்த நிலையில், அவரை குகேஷ் பின்னுக்குத் தள்ளினார். 2024ம் ஆண்டிலும் அவரது வெற்றிகள் தொடர்ந்தது. இதன் மூலமே உலக சாம்பியன்ஷிப் தொடரில் டிங் லிரனுக்கு எதிராகப் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

2024ம் ஆண்டிலும் அவரது வெற்றிகள் தொடர்ந்தது. இதன் மூலமே உலக சாம்பியன்ஷிப் தொடரில் டிங் லிரனுக்கு எதிராகப் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. கடந்த செப்டம்பர் மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அணி 2 பிரிவில் இந்தியா தங்கம் வென்ற நிலையில், அதில் குகேஷின் பங்கு முக்கியமானதாக இருந்தது. பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோருடன் இணைந்து தங்கம் வென்றார். செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வெல்வது அதுவே முதல்முறையாகும்.

சாதனை

இன்று நடந்த 14வது போட்டியிலும் குகேஷ் வெற்றி பெற்றுள்ள நிலையில், விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு உலக செஸ் சாம்பியன் ஆன இரண்டாவது நபர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார். மேலும், மிகவும் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற நபர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

2 Comments

Comments are closed