TNPSC Group Result 2024
TNPSC Group Result 2024

TNPSC குரூப் 2 முடிவுகள் வெளியீடு சர்ப்ரைஸ் தந்த டிஎன்பிஸ்சி

5/5 (9)

குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 2,327 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, 2 ஏ தேர்வை சுமார் 5.8 லட்சம் பேர் எழுதினர். செப்டம்பர் 14 ஆம் தேதி தேர்வு நடைபெற்ற நிலையில், 57 நாட்களுக்குள் தேர்வு முடிவை டிஎன்பிஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தேர்வர்கள் tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexmas.in -என்ற வெப்சைட்டில் அறியலாம்.

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. குரூப் 1 முதல் குரூப் 4 வரை என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களை டிஎஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது.

அந்த வகையில், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப் 2 பதவிகளுக்கு 507 காலி பணியிடங்களும், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு குரூப்பு 2 ஏ பதவிகளில் சுமார் 1820 காலி பணியிடங்கள் என மொத்தமாக 2327 காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி நடைபெற்றது. பட்டப்படிப்பு தகுதி கொண்ட இந்த குரூப் 2, 2 ஏ தேர்வுகளை சுமார் 5 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தேர்வு நடைபெற்று 57 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்று இந்த தேர்வு முடிவினை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. குரூப் 2, 2 ஏ தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexmas.in -என்ற வெப்சைட்டில் அறிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து, முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். இந்தாண்டு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கு தனித்தனியே தேர்வு நடைபெறும்.
குரூப் 2 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வின் முதல் தாள் 02.02.2025 அன்றும், இரண்டாம் தாள் 23.02.2025 அன்றும் நடைபெறும்.
குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வின் முதல் தாள் 02.02.2025 அன்றும், இரண்டாம் தாள் 08.02.2025 அன்றும் நடைபெறும்.
குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்விற்கு தேர்வு கட்டணம் ரூ.150 OTR ID மூலம் 14.12.2024 முதல் 18.12.2024 தேதிக்குள் செலுத்த வேண்டும்.

சமீப காலமாக தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக வெளியிட தொடங்கியிருப்பது தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தயார் ஆகும் இளைஞர்கள் பெரிதும் நம்பியிருப்பது தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் குரூப் தேர்வுகளைத்தான்.

அரசு பணி கனவுகளுடன் பல லட்ச்கணக்கான போட்டி தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். தேர்வர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆக வசதியாக ஆண்டு கால அட்டவணையும் டிஎன்பிஎஸ்சி வெளியிடுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டது. அதன்படி, அடுத்த ஆண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி தேர்வு நடைபெறும்.

தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகும். தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும். ஒருங்கிணைந்த டெக்னிக்கல் பணிகளுக்கான (நேர்முகத்தேர்வு) அறிவிப்பு மே 7 ஆம் தேதி வெளியிடப்பட்டு ஜூலை 21 ஆம் தேதி தேர்வு நடைபெறும். குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டு செப்டம்பர் 28 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.