TNPSC GROUP 4 Exam: குரூப்-4 தேர்வு தேதியை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி, 6244 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

5/5 - (2 votes)

TNPSC GROUP 4: விஏஓ, இளநிலை உதவியாளர் என 6,244 பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிப்பு வெளியானது.

Notification No.Notification DatePost NameApplication Start DateApplication End DatePayment Last DateNotificationDate of ExaminationActivity
01/202430/01/2024COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP – IV Services)30/01/202428/02/202428/02/2024Tamil English2024-06-09Apply Now

TNPSC குரூப்-4 2024

TNPSCGroup 4 Apply Online 2024
Name of the CommissionTamil Nadu Public Service Commission (TNPSC)
Name of the ExaminationGroup 4 – Combined Civil Services Examination–IV (Group-IV Services & VAO)
PostsJr Assistant, VAO, Bill Collector, Typist Etc
Advt No.1/2024
Number of Vacancies6244
Application ModeOnline
Online Registration Dates30th January to 28th February 2024
Application FeeRs. 150 as One Time Registration Fee and Rs. 100 as Exam Fee
Documents RequiredPhoto, Signature, Educational Documents
Job LocationTamil Nadu
Official Websitewww.tnpsc.gov.in

TNPSC குரூப் 4 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிபபை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 6244 பணி இடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பிரிவுகளுக்கான இந்த தேர்வு மிகுந்த போட்டி நிறைந்ததாக இருக்கும். இந்த தேர்வுகளுக்கு இன்று முதல் வரும் பிப்ரவரி.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in , www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்த தேர்வுகளுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் நிலையில் இந்தாண்டும் பல லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரசு பணி மீதான மோகம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இந்தாண்டு நடக்க உள்ள தேர்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் விவரங்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் அவற்றை மார்ச் 4 முதல் மார்ச் 6 ஆம் தேதிக்குள் அதனை செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 15லட்சத்துக்கும் அதிமானோர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வானது நடைபெற இருக்கிறது.

தமிழில் 100 கேள்விகளுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் கட்டாயம் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இவை தவிர்த்து பொதுவான கேள்விகளாக 75 கேள்விகள் இருக்கும், இவை தவிர்த்து ஆப்டிடியூட் எனப்படும் கேள்விகள் 25 இடம்பெறும் , மொத்தமாக 200 கேள்விகள் இடம்பெறும். அதற்கு மொத்தமாக 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 3 மணி நேரம் நடைபெற உள்ள இந்த தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாவது அடிப்படையிலான கேள்விகள் இடம்பெற உள்ளன. ஓஎம்ஆர் எனப்படும் சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் இந்த தேர்வானது நடைபெற இருக்கிறது. தேர்வறைகளுக்குள் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. இதேபோல் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணமாக வெறும் 100 ரூபாய் செலுத்தினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு கட்டணத்தில் சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 விண்ணப்பக் கட்டணம் 2024

TNPSC Group 4 apply fees details: 2024க்கான TNPSC குரூப் 4 விண்ணப்பக் தேர்வுக் கட்டணம் ரூ. 100 மட்டுமே எனினும் ஒரு முறை பதிவுக் கட்டணம் Rs. 100 கூடுதலாகச் செலுத்தப்பட வேண்டும்.. மொத்தம் கட்டணம் 250 ரூபாய்.

EXAMFees
One-time Registration FeeRs. 150/- (valid for 5 years)
Examination FeeRs.100/-
SC/ SC (Arunthathiyars)/ ST/ PwBD/ Destitute WidowNo fee
MBC/ Denotified Communities/ BC (Other than Muslim)/ BC (Muslim)3 free chances
Ex-Servicemen2 free chances… Read more at: https://www.adda247.com/jobs/tnpsc-group-4-apply-online/

காலிப்பணியிடங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலிப்பணியிட எண்ணிக்கை
1கிராம நிர்வாக அலுவலர்108
2இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)2,442
3இளநிலை உதவியாளர் (பிணையம்)44
4தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்10
5தமிழ்நாடு வக்பு வாரியம்27
6தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்49
7தமிழ்நாடு சிறு தொழில் கழகம்15
8தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்7
9தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம்10
10தமிழ்நாடு அமைச்சுப்பணி, நீதி அமைச்சுப்பணி, தலைமைச் செயலகம் பணி, சட்டமன்ற பேரவை செயலகப்பணி – தட்டச்சர்1,653
11தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – தட்டச்சர்3
12தமிழ்நாடு சிறு தொழில் கழகம் – தட்டச்சர்3
13தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் – தட்டச்சர்39
14தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் – தட்டச்சர்7
15தமிழ்நாடு அமைச்சுப்பணி / நீதி அமைச்சுப்பணி – சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை 3)441
16தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – சுருக்கெழுத்து தட்டச்சர்2
17தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் – சுருக்கெழுத்து தட்டச்சர்2
18தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – நேர்முக உதவியாளர் (சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 2)1
19தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – நேர்முக எழுத்தர் (சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3)2
20தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் – தனிச்செயலர் நிலை 34
21தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் – இளநிலை செயல் பணியாளர் (அலுவலகம்)34
22தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் – இளநிலை செயல் பணியாளர் (தட்டச்சு)7
23தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி இயக்குபவர்1
24தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் – பால் அளவையாளர் (நிலை 3)15
25தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணி – ஆய்வக உதவியாளர்25
26தமிழ்நாடு அமைச்சுப்பணி / பேரூராட்சிகள் துறை – வரித்தண்டலர்66
27தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் – முதுநிலை தொழிற்சாலை உதவியாளர்49
28தமிழ்நாடு வனசார்நிலைப் பணி – வனக்காப்பாளர்171
29தமிழ்நாடு வனசார்நிலைப் பணி – ஓட்டுநர் உரிமைத்துடன் கூடிய வனக்காப்பாளர்192
30தமிழ்நாடு வனசார்நிலைப் பணி – வன காவலர்526
31தமிழ்நாடு வனசார்நிலைப் பணி – வன காவலர் (பழங்குடியின இளைஞர்)288
32தமிழ்நாடு கூட்டுறவு சார்நிலைப் பணி – கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர்1
மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை   6,244

TNPSC குரூப் 4 2024க்கு விண்ணப்பிப்பதற்கான படிகள்

TNPSC குரூப் 4 2024 க்கு விண்ணப்பிக்க கீழே உள்ள படிகளைப் பின்பற்றி விண்ணப்பதாரர்கள் செய்யலாம்.

படி 1: www.tnpsc.gov.in இல் அதிகாரப்பூர்வ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (TNPSC) பார்வையிடவும் அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பைப் பயன்படுத்தவும்.

படி 2: இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், முக்கியமான இணைப்புகளின் கீழ் “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3: புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். இப்போது, “ஒரு முறை பதிவு மற்றும் டாஷ்போர்டு” என்பதைக் கிளிக் செய்து, “புதிய பயனர்” (பதிவு செய்யவில்லை என்றால்) அல்லது “பதிவு செய்த பயனர்” (பதிவு செய்திருந்தால்) என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 4: புதிய பயனராக, உங்கள் உள்நுழைவு ஐடியை உருவாக்கி, அதைச் சமர்ப்பிக்க வேண்டும். இது ஆரம்ப கட்டமாகும், OTR இல்லாமல் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறைக்கு செல்லலாம்.

படி 5: OTR முடிந்ததும், https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== ஐப் பார்வையிடுவதன் மூலம் TNPSC குரூப் 4 க்கு விண்ணப்பிக்கவும். அங்கு உங்கள் OTR உள்நுழைவு ஐடியை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.

படி 6: படிவத்தில் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றவும். உங்கள் தொடர்பு முகவரி விவரங்களை அளித்து, உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை மீண்டும் பதிவேற்றவும்.

படி 7: படிவத்தை சமர்ப்பிக்கும் முன், உங்களின் அனைத்து விவரங்களையும் மதிப்பாய்வு செய்யவும்.

படி 8: பொருந்தினால், டெபிட்/கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது இ-சலான் மூலம் கட்டணத்தைச் செலுத்தவும்.

படி 9: சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும், உங்கள் படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும்.

படி 10: உங்கள் ஆன்லைன் TNPSC குரூப் 4 விண்ணப்ப செயல்முறை இப்போது முடிந்தது. எதிர்கால குறிப்புக்காக விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்க மறக்காதீர்கள்.

TNPSC 2024 நிகழ்வுகள்
(TNPSC 2024 Events)
முக்கிய தேதிகள்
TNPSC Group 4 Notification 202430th January 2024
TNPSC Group 4 Application Form 202430th January 2024
TNPSC Group 4 Apply Online last date28th February 2024 (11.59 pm)
Last Date to Pay Fee28th February 2024  (11.59 pm)
Application Correction Window04th to 06th March 2024
TNPSC Group 4 Exam 202409th June 2024… Read more at: https://www.adda247.com/jobs/tnpsc-group-4-apply-online/

ஒவ்வொரு பணிக்கும் தேவையான வயது வரம்புகள் மற்றும் வயது வரம்பு சலுகைகளும் இணையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வின் பொழுது பயன்படுத்தக்கூடிய பொருட்கள் தயார் செய்யப்பட்ட பொருட்கள் விபரங்களை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வர்களுக்கான எச்சரிக்கையும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

I am Vimal - Versatile blog writer with a flair for transforming ideas into engaging narratives. Crafting content that informs, inspires, and captivates readers on a diverse range of topics.

You may also like...