ஆரஞ்சு பழம் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்த பழங்களில் ஒன்று . இதை அப்படியே சாப்பிடும்போதும் ஜூஸாக எடுத்துக் கொள்ளும்போதும் நிறைய ஆரோக்கிய மாற்றங்களைத் தரும். ஆரஞ்சு ஜூஸை எந்தெந்த சமயத்தில் குடிக்கும்போது நிறைய பலன்களைப் பெற முடியும் என்று பார்க்கலாம்.
- நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ள சமயங்களில் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும்போது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
- தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளக்கும்.
- ஆரஞசு பழத்திலுள்ள வைட்டமின் சி தலைமுடிக்கு ஊட்டத்தையும் பளபளப்பையும் கொடுக்கும்.
- இதிலுள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்தும்.
- கால்சியம் இதில் இருப்பதால், தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது எலும்புகள் வலுவடையும்.
- ஆரஞ்சு பழத்தில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் இருப்பதால் ஜீரண ஆற்றலை மேம்படுத்தும்.
- ஆரஞ்சு பழம் கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- ஆரஞ்சு ஜூஸில் அமிலத் தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது.
- ஆரஞ்சில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்பை கொண்டிருக்கின்றன.
Pingback: பிளாக் காபி vs பிளாக் டீ காலையில் குடிக்க எது பெஸ்ட் | ஆரோக்கியம்