பேசும் போது நா பிறழ்ந்து தடுமாற்றம் ஏற்பட்டால், தமிழ் நா பிறழ் பயிற்சி வாக்கியங்கள் உங்களுக்கு பேசும்திறனை வளர்க்க உதவும். இந்த சொற்களை வேகமாக சொல்வதன் மூலம் உங்களால் நா பிறழ்வதை தடுக்க முடியும்.
நீங்கள் வேடிக்கையாக பயன்படுத்தினாலும் அல்லது மொழியை தங்குதடையின்றி பேச முயற்சித்தாலும், இந்த பதிவில் உள்ள சில பிரபலமான புதிய தமிழ் நா பிறழ் பயிற்சி வாக்கியங்கள் உள்ளன. இது உங்களுக்கு பயன்படும்.
கொழுத்த மழையில் வாழை தோப்பை எட்டி பார்த்த
பழுத்த கிழவி இலை வழுக்கி கீழே விழுந்தாள்
வட்டமான பட்டம் விட்டான்
தட்டையான குட்டை பையன்
நம்ம தோசை நல்ல தோசை
தச்சன் தோசை தீஞ்ச தோசை
யார் தச்ச சட்டை
எங்க தாத்தா தச்ச சட்டை
தச்ச சட்டை கோண சட்டை
கிட்டத்தட்ட ஓட்ட சட்டை
அங்கத்தில் தங்கம் தொங்க
சங்கத்தில் சேர சிங்கத்தில் வந்தான்
மங்கள நாட்டு அங்கத பாண்டியன்
மலவாழை பறிக்க
மலை ஏறி வழி மாறி
உருமாறி வந்தாள் சிங்காரி
கோரை புல்லில் தேரை இருந்தால்
சாரை பார்த்து சீரும்
சீரும் சாரை கீறி பார்க்க
தேரை விட்டு ஓடும்
லாரி சாரி சாரி லாரி
சாரி லாரி லாரி சாரி
செவ்வாய் கிழமையில்
விழுப்புரத்தில் வழுக்கி விழுந்த
ஏழை கிழவன் எழுச்சியுடன் எழுந்து நின்றார்.
அலரிப்பூவை பார்த்த ஆணை
அலறலோடு அலற அலறியோட
வழ வழ காட்டில் கொழ கொழ பெண்ணொருத்தி
வாழைப்பழத்தில் வழுக்கி தாழை புதரில் விழுந்தாள்
துளி துளி பனித்துளி
கிளி கிளி பசுங்கிளி
களி களி கண்டு களி
விழி விழி கரு இழி
கடுகு தோப்பில் குருவை பார்த்த
குருட்டு கிழவன் சடுகுடு விளையாட
குடுகுடுவென ஓடி கீழே விழுந்தான்.
ரெண்டு செட்டுச் சோள தோசையிலே
ஒரு செட்டு சோள தோசை
நம்ம வீடு சொந்த சோளை
நீட்ட கொக்கு போட்ட முட்ட
நல்ல முட்ட
கெட்ட கொக்கு இட்ட முட்ட
ஓட்ட முட்ட
நுங்கை பங்கு போட்டு தின்ன
அங்கும் இங்கும் ஓடினான்
தங்கை வந்ததும் எங்கும் நிற்காமல்
கிடங்கு பக்கம் ஓடினான்
வீட்டு மேல கூரை
கூரை மேல பாறை
பாறை மேல நாரை
நாரை மேல தேரை
சிங்கம் வந்து பங்கம் செய்து
அங்கம் தொட்டு பக்கம் நின்றது
சரக்கு ரயிலை குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை.
புட்டும் புது புட்டு தட்டும் புது தட்டு
டக்கென புட்டை தின்ன
சிட்டாய் பறந்து வா..
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி..
துத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதி
– காளமேகப் புலவர்
ஒரு குடம் எடுத்து
அரை குடம் இறைத்து
குறை குடம் நிறைத்து
நிறை குடம் ஆக்கினான்
தட்டு நிறைய புட்டு
புட்டு மேல லட்டு
லட்டு தின்ன துட்டு
துட்டு மொத்தம் எட்டு
ஓடுற நரியிலே ஒரு நரி குள்ள நரி தான்
கிழநரி முதுகுல பல முடி நரைமுடி தான்
வியாழக்கிழமை தாழம்பூ வச்ச சிட்டு
மழைநடுவே வாழைப்பூ அன்னமிட்டு
கழிமுகம் பார்க்க விழித்து எழுந்தாள்
காக்கைக்கு ஆகா கூகை
கூகைக்கு ஆகா காக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக்
கொக்கொக்க கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா
– காளமேகப் புலவர்
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில
பைத்தியங்களுக்கு வைத்தியம் பாக்குற
வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால்,
எந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்
பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற
வைத்தியர் வந்து அந்தப்
பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?
சுத்துர பூமியில இருந்து
சுத்தாத ஆகாயத்துக்கு போயி
சுத்தாத ஆகாயத்திலிருந்து
சுத்துர பூமிய பாத்தா
சுத்தாத ஆகாயம் கூட
சுத்துர பூமி மாதிரி சுத்தும்
குன்னூரில் குடியிருக்கும்
சுப்பனின் குமரன் குப்பன்,
குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் குரங்கை
சுருட்டை குச்சியால் குத்தினான்.
குரங்கு குதியோ குதியேன்று குதித்தது.
கள்ளித் தோப்புக்குள்ளே
வள்ளிப்பெண் போகையிலே
எள்ளி நகையாடினான் கள்ளன்
தள்ளி போகச்சொன்னாள் வள்ளி
கோழி கொக்கர கோழி
தீனி கொத்துற கோழி
வழுவழு கொழுகொழுவென
வளர்ந்து நிக்கிற கோழி
நா பிறழ் பயிற்சி வாக்கியங்கள்
வில்வராயநல்லூரில் வில்வ மரத்தடியில்
வில்லை வைத்துக்கொண்டு
வில்வக்காயை அடித்தான் வீரபத்திரன்.
ஓடுற நதியிலே ஒரு நதி நல்ல நதி தான்
அதன் தண்ணியில வந்த கனிகளும் இனிக்கலை தான்
கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட
கடல் கரையில அலை உருளுது பிரளுது
கடல் நடுவிலே மீன் வளருது நெலியுது இருட்டினில் ஒளிருது
கனி பழுக்க கிளி கொத்தும்
கனி பிடுங்க கிளி கத்தும்
பிரண்டையின் உருண்டையில் பிரண்டு கிடைக்காது
பிரண்டையின் முன்னே பிரண்டு கிடைக்கும்.
கழுவுற மீனுல
நழுவுற மீனு,
நழுவுற மீனொரு
வாழ மீனு.