தமிழர் நிலத்திணைகள்: சங்ககால பாடல்கள் மக்கள் வாழ்ந்த நிலங்கள்,வாழும்முறை என்பதற்கு ஏற்ப திணைகளாக வகுத்து பாடல்கள் இயற்றினார். ஐந்திணை குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும். இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது. கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.
- மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை
- காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை
- இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது.
- வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்,
- கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.
குறிஞ்சி
குறிஞ்சி நில மக்கள் மலைகளில் வாழ்ந்தனர். முருகனை அவர்கள் வழிபட்டனர். இயற்கை வளங்கள் நிறைந்தது, ஆகையால் உணவு காடுகளால் கிடைத்தது. அவர்கள் காதல் வாழ்க்கையில் இன்பமாக ஈடுபட்டனர்.
தலைவன் தலைவி களவுமணம் புரிய நள்ளிரவை தேர்ந்து எடுத்தனர். மேலும் இரவில் மிருகங்கள் உறங்கும் எனவே பாதுகாப்பாக இருக்கலாம். ஆகவே யாமமும், முன்பனியும் முறையே சிறுபொழுது,பெரும்பொழுது ஆகின. அவர்களது திணை ஒழுக்கம் புணர்தலும் புணர்தல் நிமித்தம் ஆகும்
முல்லை
முல்லை நில மக்கள் மேய்ச்சல் நிலப்பகுதியில் வாழ்ந்தனர். ஆயன் திருமாலை வணங்கினர். ஆநிரைகள் தரும் பால்சார்ந்த உணவுகளை உண்டனர். தலைவன் மேய்ச்சலுக்கு சென்றுவிடுவான். தலைவி அவனை மனதில் நினைத்து நம்பிக்கையோடு காத்திருப்பாள்.
மேய்ச்சலுக்கு சென்ற மந்தைகள் மழைக்காலத்தில் மாலையில் வீடு திரும்பும்.ஆகவே மாலையும்,கார்காலமும் முறையே சிறுபொழுது,பெரும்பொழுது ஆகின. அவர்களது திணை ஒழுக்கம் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் ஆகும்.
மருதம்
மருத நிலம் நீர் வளமும் நில வளமும் மிகுந்தது. நெற்பயிர்கள் நீரின் மிகுதியால் செழித்து வளர்ந்தன. அவர்கள் மின்னலின் அதிபதி இந்திரனை வணங்கினர்.உடல் உழைப்பு மிகுதி ஆகையால் தலைவனும் தலைவியும் சின்ன சின்ன சண்டையிட்டு பின்பு கூடி இன்பம் அடைந்தனர்.
உழவு தொழில் மேற்கொள்பவர் சூரியன் உதயத்திற்கு முன்பே உழைக்க சென்றுவிடுவர். ஆகவே வைகறை சிறுபொழுது ஆகும். சமவெளி பகுதியில் அனைத்து பெரும்பொழுதும் நிலவும். அவர்களது திணை ஒழுக்கம் ஊடலும் ஊடல் நிமித்தமும் ஆகும்
நெய்தல்
நெய்தல் நில மக்கள் கடலோர பகுதிகளில் வாழ்ந்தனர். பெரும் கடலை சார்ந்தே அவர்கள் வாழ்ந்தால் அவர்கள் நீரின் அதிபதி வருணனை வணங்கினர். தலைவியை பிரிந்து தலைவன் சென்றுவிட தலைவி அவனுக்காக காத்திருந்து வருந்துவாள்.கடல் மூலம் கிடைக்கும் உணவே அவர்களுக்கு முதன்மை உணவாகும்.
கடலுக்கு சென்ற கப்பல்கள் இரவில் திரும்பும்.ஆகவே ஏற்பாடு சிறுபொழுது ஆகும். கடல் பகுதியில் அனைத்து பெரும்பொழுதும் நிலவும் அவர்களது திணை ஒழுக்கம் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆகும்.
பாலை
மேலே சொன்ன நிலங்கள் வளம் குறைந்து வறட்சி தோன்றும் போது பாலையாக மாறின.அவற்றின் வளம் குறைந்ததால் அவர்கள் வழிப்பறி போன்ற தொழிலில் ஈடுபட்டனர்.அவர்கள் சினம் மிகுந்த தெய்வமான கொற்றவையை வணங்கினர். அவர்களது உணவு பாலையில் வாழும் சிறு மிருகங்கள், வழிப்பறி மூலம் கிடைக்கும் உணவு ஆகும்.கொடிய பாலைவனத்தில் தலைவி வாழ்வது கடினம் எனவே அவன் தலைவியை பிரிந்து செல்வான்.
பாலையின் குணம் சுட்டெரிக்கும் வெயிலும், வறட்சியும் ஆகும்.எனவே நண்பகல் சிறுபொழுது ஆயிற்று.அனைத்து கடுமையான கால நிலையும் பெரும்பொழுது ஆகும். அவர்களது திணை ஒழுக்கம் பிரிதலும், பிரிதல் நிமித்தமும் ஆகும். வாழ்வில் கலைகளை காணாமல் வாழ்வையே கலையாக வாழ்ந்துள்ளனர் கவிகளும், முன்னோர்களும்..
நிலத்தின் அழகு மீது கொண்ட காதலும், ஒவ்வொரு திணைக்கும் ஓர் நீர் நிலையை குறிப்பிட்ட அழகிலும் சிறிய சிறிய பொருளிலும் மகிழ்ச்சியை அடைந்துள்ளனர்.வறுமையிலும் அழகை காண்பதற்கு பாலை நில வருணனைகள் உதாரணம்.. ஏதோ ஒரு நம்பிக்கை,அதிகமான அன்பே உறவில் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகின்றன என்பதற்கு தலைவிகளின் காத்திருப்பும்,தலைவர்களின் அன்பே உதாரணம்.
Type of Land | Tamil Translation |
---|---|
Forestry (Land) | முல்லை (Mullai) |
Mountainous (Land) | குறிஞ்சி (Kurinji) |
Barren and Parched | பாலை (Paalai) |
Agricultural (Land) | மருதம் (Marutham) |
Marine (Land) | நெய்தல் (Neythal) |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நெய்தல் நில மக்கள் யார்?
கடலும் கடல் சார்ந்த நிலமே நெய்தல். சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர் நெய்தல் நிலத்து மக்கள் ஆவர். நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன்.
குறிஞ்சி எந்த நிலத்தை சார்ந்தது?
குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு சேயோன் தெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார்.
நானிலம் என்றால் என்ன?
தமிழர் நிலத்தை நான்கு வகையாகப் பாகுபடுத்திப் பார்த்தனர். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன அவை.