Chennai Velachery December 12, 2024: சென்னையில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் காரின் உரிமையாளர்கள் கார்களை பார்க் செய்து வருகின்றனர். மூன்றாவது முறையாக சென்னை வேளச்சேரி மேம்பாலம் கார் பார்க்கிங் ஆக மாறி உள்ளது.
சென்னையில் மழை பெய்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்கள் கார்களை மேம்பாலத்தில் பார்க் செய்து வருகின்றனர்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்க கடல் பகுதியில் மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது, டிசம்பர் 16ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம்
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து காணப்படுகின்றது கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்து வருகின்றது சென்னையில் நேற்று இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
மேம்பாலங்களில் கார்களை பார்க் செய்ய தொடங்கியுள்ளனர்
மேலும் தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடத்திற்கு சென்று வருகின்றனர். மேம்பாலங்களில் கார்களை பார்க் செய்ய தொடங்கியுள்ளனர். சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் தங்களுடைய கார்களை மழைக்காலத்தில் பார்க் செய்வது வாடிக்கையாகி வரும் நிலையில் தற்போது பெய்து வரும் மழைக்கு வேளச்சேரி மேம்பாலத்தில் தங்களது கார்களை பார்க் செய்துள்ளனர்.
கார்களுக்கு அபராதம்
போக்குவரத்து துறை சார்பாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு அபராதம்: ராயபுரம் மேம்பாலமும் கார் பார்க்கிங்காக மாறியதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது, சென்னையில் கடந்த ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் கார் உரிமையாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர், வெள்ளத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவை மூழ்கிய நிலையில் பல லட்ச ரூபாய் செலவு செய்து கார்களை மீட்டெடுக்கும் முயற்சியில் கார் உரிமையாளர்கள் ஈடுபட்ட நிலையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த இரண்டு முறை கனமழைக்கும் வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை பார்க் செய்த நிலையில் போக்குவரத்து துறை சார்பாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாளை சென்னையில் கன மழை
ஆனால் தற்போது இன்று மூன்றாவது முறையாக வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை உரிமையாளர்கள் நிறுத்தி வருகின்றன. நாளை சென்னையில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழை வெள்ளத்தில் கார்கள் மூழ்குவதை தவிர்ப்பதற்காக மேம்பாலத்தின் மீது கார்களை நிறுத்தியதாக காரின் உரிமையாளர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.