Delta Districts
Delta Districts

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்

5/5 - (1 vote)

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பேட்டி

திருவாரூர் சிங்காரவேலர் நினைவகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் டெல்டா மாவட்டங்களில் தற்போது வறட்சி நிலை காணப்படுவதால் சம்பா மற்றும் தாளடி பெயர்கள் அழியும் சூழல் உள்ளது. அதனால் வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்கள்

திருவாரூர் பகுதியில் உள்ள சிங்காரவேலர் நினைவகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் டெல்டா மாவட்டங்களில் தற்போது வறட்சி காணப்படும் நிலையில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் அழியும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரை நம்பி உள்ளது.

சம்பா தாளடி குறுவை சாகுபடி

காவிரி மேலாண்மை வாரியம்பலமுறை வலியுறுத்திய நிலையில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கொடுக்காமல் கர்நாடக அரசு ஏமாற்றி வருகின்றது. அதனால் மேட்டூரில் உள்ள குறைந்தபட்ச நீரைக் கொண்டு சம்பா, தாளடி, குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.

வெள்ள பாதிப்பில் பயிர்கள் சேதம்

ஆனால், சில நாட்களுக்கு முன்பு வழக்கத்தை விட டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்ததால் பயிர்கள் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் போராடி பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு கணக்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கணக்கெடுக்கப்படும் என அரசு அறிவித்தும் தற்போதுவரை அரசு கணக்கெடுக்கவில்லை.மேலும் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.

பிப்ரவரி 15 தண்ணீர் திறக்க வேண்டும்

மேலும், தற்போது சம்பா, தாளடி பயிர்களுக்கு தண்ணீர் தேவைபடுகின்றது. ஜனவரி- 28 வரை தான் மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற நிலையில். பிப்ரவரி 15-ஆம் தேதி வரை தாளடி- சம்பா பயிர்கள் அறுவடை நடைபெறும் அதனால் தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம்

இது தொடர்பாக தமிழக அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை இதுகுறித்து முறையிட்ட நிலையில் தற்போதுவரை தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை, ஒவ்வொரு முறையும் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் கூடி அவர்கள் கொடுக்கும் தீர்ப்பை கர்நாடகா அரசு அலட்சியப்படுத்தி தண்ணீர் கொடுக்க மறுத்து வருகின்றது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தற்போது காவிரி ஆணையம் பல் இல்லாத ஆணையமாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு, கர்நாடகா அரசிடமிருந்துகொடுக்க வேண்டிய தண்ணீரை பெற்று தர வேண்டும் என்பதை வலியுறுத்தி,வருகின்ற ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாட்களும் காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் தேவைப்படுகின்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

வேளாண்மை துறையினர்

அன்று மாலை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளோம். மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்மை துறையினர் அலட்சியம் இல்லாமல் அரசுக்கு எடுத்துரைத்து தண்ணீர் திறந்து விட வேண்டும் இல்லையெனில் மாவட்ட அளவில் தொடர் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் உருவாகும் என கூறினார். இந்த பேட்டியின் பொழுது விவசாய சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *