சந்திர கிரகணம் மார்ச் 25ம் தேதி நடக்க உள்ள நிலையில் அடுத்து, சூரிய கிரகணம் 2024 நடக்க உள்ளது. இந்த சூரிய கிரகணம் எந்த தேதியில் நடக்க உள்ளது, எத்தனை மணிக்கு தொடங்குகிறது?, இந்தியாவில் பார்க்க முடியுமா என்பதை தெரிந்து கொள்வோம்.
சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது
சூரியன் – பூமிக்கு இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால், சூரியனின் ஒளி மறைக்கப்படும் நிகழ்வு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.
சூரிய கிரகணம் 2024 எப்பொழுது
சந்திர கிரகணம் 2024 மார்ச் 25ம் தேதி, திங்கட் கிழமை பெளர்ணமி அன்று நிகழ உள்ளது. எப்போதும் கிரகணம் என்றால் அடுத்தடுத்து இருமுறை ஏற்படும். எப்போதும் ஒரு சந்திர கிரகணம் ஏற்படக்கூடிய பௌர்ணமியை, தொடர்ந்து அடுத்த 15வது நாள் வரும் அமாவாசை தினத்தில் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது.
அந்த வகையில் மார்ச் 25ல் தேதி சந்திர கிரகணம் முடிந்து அடுத்த 15 நாளில் வரக்கூடிய அமாவாசை தினத்தில் ஏப்ரல் 8ம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.
சூரிய கிரகணம் எத்தனை மணிக்கு
ஏப்ரல் 8ம் தேதி வரக்கூடிய சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்குகிறது. இந்த கிரகணத்தின் உச்சம் இரவு 11.47 மணிக்கு நிகழ்கிறது.. கிரகணம் நள்ளிரவு 2.22 மணிக்கு முடிவடைகிறது.
இந்தியாவில் தெரியுமா
இந்திய நேரப்படி இரவு நேரத்தில் இந்த சூரிய கிரகணம் ஏற்படுவதால், இந்தியாவில் பார்க்க முடியாது.
சூரிய கிரகணம் எங்கெல்லாம் பார்க்கலாம்?
வட அமெரிக்கா, தென் அமெரிக்காவில் வடக்கு, பசிபிக், அட்லாண்டிக், ஆர்க்டிக், ஐரோப்பாவில் மேற்கு நாடுகளிலும் இந்த கிரகணம் பார்க்க முடியும்.