கோடையில் தவிர்க்க வேண்டிய பத்து வகை உணவுகள்

5/5 - (3 votes)

கோடைக்கால வெப்பநிலை ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டு செய்யும். அதிக வெப்பநிலை வறண்ட வானிலை உடலை சோர்வடைய செய்யலாம். வெப்பநிலை அதிகரிக்கும் போது கோடைக்கால நோய் தாக்கம் வாய்ப்பு அதிகமாக இருக்கும். தாகம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் அதிகம் குடிப்பீர்கள் இது நன்மையே என்றாலும் கூட பசி உணர்வு மறைந்துவிடும். கோடை முழுவதும் ஆரோக்கியமாக இருக்க நீரேற்றம் போன்று உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை அறிவது அவசியம். அத்தகைய உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

பழச்சாறுகளை எடுத்துகொண்டால் அது உடலுக்கு நார்ச்சத்தை அளிக்காது.
சாஸ்கள் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் நீரிழப்பு ஏற்படுகிறது.

கார உணவுகள்

வெயில் காலத்தில் கார உணவுகள் எடுப்பது பித்த தோஷத்தை அதிகரிக்கும். இது உடல் சூட்டை அதிகரித்து அதிகப்படியான வியர்வை உண்டு செய்து நீரிழப்பை ஏற்படுத்தும். மேலும் அஜீரணம் மற்றும் அசெளகரியத்தையும் உண்டு செய்யும் என்பதால் கார உணவுகள் கண்டிப்பாக சேர்க்க கூடாது.

ஊறுகாய்

ஊறுகாய் சோடியம் அதிகம் கொண்ட உணவு. இது நீரிழப்பை உண்டு செய்யக்கூடியது. வெயில் காலம் முடியும் வரை ஊறுகாய் தவிர்ப்பது நல்லது. மேலும் இது அஜீரணம் அல்லது குடல் ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டு செய்கிறது. ஊறுகாய் தவிர்க்க முடியாதவர்கள் கட்டுக்குள் வைப்பது பாதுகாப்பானது.

வறுத்த உணவுகள்

பர்கர், சமோசா மற்றும் ப்ரெஞ்ச் ப்ரைஸ் போன்ற வறுத்த உணவுகள் அதிக நீரிழப்பை உண்டு செய்கின்றன. மேலும் இதில் அதிக உப்பு இருக்கும். இதனால் செரிமானம் சிக்கலை உண்டு செய்யும். இவற்றில் அதிக எண்ணெய் இருப்பதால் மந்தமாக உணர வைக்கும். கோடைக்காலத்தில் அதிகப்படியான வியர்வை மற்றும் எண்ணெய் உணவுகள் முகப்பருக்களை தூண்டும்.

உலர் பழங்கள்

உலர் பழங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யக்கூடியவை. ஆனால் இதை கோடைக்காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதிக இனிப்பு உள்ளடக்கம் இருப்பதால் இது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும்.வியர்வையை உண்டு செய்யும்.

மில்க்‌ஷேக்

மில்க் ஷேக் சோடா போன்று இது பால் உள்ளடக்கத்துடன் இருந்தாலும் நீரிழப்பை உண்டு செய்யும். ஆரோக்கியமற்ற கலோரிகளால் இவை நிரம்பியுள்ளன. மேலும் இது உயர் இரத்த அழுத்தம் , நீரிழிவு உடல் பருமன் மற்றும் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏனெனில் இவை அதிக சர்க்கரை உள்ளடக்கம் நிறைந்தவை.

சாஸ்கள்

சாஸ்கள் மற்றும் சாலட் டிரஸ்ஸிங்ஸ் சஸ்க்ள் போன்ற உணவுகள் பிடித்தமானவையாக இருந்தாலும் அது ஆரோக்கியமான கோடை உணவுகளாக இருக்கது. இதில் பயன்படுத்தப்படும் பொருள்கள் வீக்கம் மற்றும் மந்தத்தன்மையை உண்டு செய்யும். இதில் அதிக அளவு மோனோசோடியம் குளூட்டமெட் மற்றும் உப்பு உள்ளது. இது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் நீரிழப்பு ஏற்படுகிறது.

பழச்சாறு

பழச்சாறு வெயில் காலங்களில் இதமாக இருக்கும். அதனால் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால் தொடர்ந்து பழச்சாறுகளை எடுத்துகொண்டால் அது உடலுக்கு நார்ச்சத்தை அளிக்காது. பழச்சாறுகளை விட புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் நல்ல தேர்வாக இருக்கும்.

சோடா பானங்கள்

கார்பனேற்றப்பட்ட பானங்கள் அடிமையாக்கும் என்பதை அறிவோம். கோடையில் அதன் குளிர்ந்த தன்மைக்காக மீண்டும் மீண்டும் குடிக்க ஆரம்பிக்கலாம். ஆனால் சோடா, ஆற்றல் பானங்கள் மற்றும் விளையாட்டு பானங்கள் போன்ற சர்க்கரை பானங்கள் தவிர்க்க வேண்டும். இவை அதிக அளவு சர்க்கரையை கொண்டிருப்பதால் இது நீரிழப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

காஃபி

காஃபி உடலை நீரிழப்பு செய்கிறது. இது நீர்ச்சத்து குறைக்க கூடிய டையூரிடிக் ஆகும். உடலின் வெப்பநிலையை அதிகரிக்கிறது. கோடைக்காலங்களில் காஃபியை கைவிட முடியாவிட்டாலும் அதன் நுகர்வை கட்டுப்படுத்துவது நல்லது. மிதமான அளவு ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும்.

ஆல்கஹால் பானம்

ஆல்கஹால் எப்போதுமே தவிர்க்க வேண்டியது தான். கோடை காலங்களில் இது நீர்ச்சத்தை இழக்க செய்யும். ஹீட் ஸ்ட்ரோக் உண்டு செய்யும். அதனோடு தலைவலி, உலர் வாய் மற்றும் உடல் வெப்பநிலை அதிகரிப்பது போன்றவற்றையும் செய்யும்.

I am Vimal - Versatile blog writer with a flair for transforming ideas into engaging narratives. Crafting content that informs, inspires, and captivates readers on a diverse range of topics.

You may also like...