Lordsiva
Lordsiva

300 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அதிசய மஹாசிவராத்திரி

5/5 - (2 votes)

இந்து பஞ்சாங்கத்தின்படி, மகா சிவராத்திரி அன்று அதிகாலை 4:45 மணிக்கு தொடங்கி நாள் முழுவதும் சிவயோகம் உள்ளது. இதேபோல் சர்வார்த்த சித்தி யோகம் காலை 6:45 மணிக்கு தொடங்கி 10:41 வரை நீடிக்கும். சுமார் 300 ஆண்டுகளுக்கு பிறகு இப்படிப்பட்ட யோகம் கிடைக்கிறது.

இந்த நேரத்தில், மகர ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை நடப்பதால் சந்திர மங்கள யோகம் உருவாகிறது. மேலும் கும்ப ராசியில் சுக்கிரன், சனி, சூரியன் என மூன்று கிரக சேர்க்கை யோகம், மீனத்தில் ராகு மற்றும் புதன் இணைவும் நடக்கிறது. இந்த ராசிக்காரர்கள் மஹாசிவராத்திரியில் உருவாக்கக்கூடிய யோகத்தால் அற்புதமான பொருளாதார பலன்களைப் பெறுவார்கள்.

2024 மாசி மாதம் வரும் மஹாசிவராத்திரி 300 ஆண்டுகளுக்குப்பிறகு வரும் யோகம் நிறைந்த மஹாசிவராத்திரி ஆகும்.

இது அவர்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும். வருமானமும் அதிகரிக்கும். நீங்கள் முன்பு செய்த கடின உழைப்புக்கு முன்னேற்றம் தரக்கூடிய பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறலாம். முதலீடுகள் மூலம் லாபத்தை பெறலாம். ஆரோக்கியம் மேம்படும்.

மகா சிவராத்திரியின் போது சிவபெருமானின் சிறப்பு பூஜைகளால் மகத்தான பலனை பெறலாம். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் அமையும். நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதில் நல்ல வெற்றியைப் பெறலாம். எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிப்பீர்கள். சிவபெருமானின் அருளால் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை மீண்டும் ஒருமுறை தொடங்கி அதில் வெற்றி பெறலாம்.

சிம்ம ராசியினருக்கு சிவராத்திரியில் உருவாகக்கூடிய சுப யோகங்களால் பல நன்மைகளைப் பெறலாம். உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வியாபாரம், தொழிலில் நல்ல லாபத்தையும், நற்பெயரையும் பெறுவீர்கள்.

கடன் தொல்லையிலிருந்து விடுபட முடியும். புதிய வண்டி, வாகனம், வீடு போன்ற விஷங்கள் குறித்த முயற்சிகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் நல்ல தகவல் பெறுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.